Posts

Showing posts with the label BiggBoss Kavin

பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யாரு தெரியுமா..?

Image
சீரியல் நடிகர் கவின் சமீபத்தில் நடைபெற்றே பிக்பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராக கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். ஆனால், இறுதி சுற்றுக்கு முன் தானாகவே முன்வந்து வெளியேறிவிட்டார். அபிராமி,சாக்‌ஷி, லாஸ்லியா என காதல் சர்ச்சைகளில் அவர்களுடன் இவர் சிக்கினாலும் அவருக்கென கவின் ஆர்மி துடிப்பாக செயல்பட்டு வருகிறது.  அண்மையில் அவர் அடுத்ததாக ஒரு படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வந்தது. இந்நிலையில் அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் கேப்டன் தென்றலாக நடித்த அம்ரிதா தான் நடிக்கிறாராம்.  மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினீத் என்பவர் இயக்கி தயாரிக்க, படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் - இயக்குனரே வெளியிட்ட தகவல்..!

Image
தொலைகாட்சியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின். இதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பல்லாயிரம் ரசிகர்கள் கவர்ந்தார். ஆனால் பிக் பாஸிற்கு செல்லும் முன்பே இவர் ந ட்புன்னா என்னான்னு தெரியுமா..? என்ற படத்தில் நடிகை ரம்யா நபிசனுடன் இணைந்து நடித்திருந்தார்.  மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு இவர் வெளியே வந்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவர், படங்களில் காமிட்டானது நாம் அறிவோம்.  அதில் தற்போது கவினின் இரண்டாவது படமாக உருவாகி வரும் படத்தின் இயக்குனர் வினீத் பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் இசையை பற்றி அப்டேட் தெரிவித்துள்ளார். View this post on Instagram Final moments of recording. Soon it will be there in everyone's play list. #composing #tamilmovie #kollywood #kavin A post shared by Vineeth Varaprasad (@dirvineethvaraprasad) on Feb 16, 2020 at 8:10am PST

அந்த இயக்குனருடன் டேட்டிங் போகணும் - பிக்பாஸ் கவின் கண்றாவி பேச்சு.!

Image
தமிழ் பிக்பாஸ் 3 சீசன் தமிழில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த, 3வது பிக்பாஸ் சீசனில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் சீரியல் நடிகர் கவின்.  காதல் மன்னனாக வளம் வந்த வந்த இவரிடம் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில், டேட்டிங் யாருடன் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அவர் இயக்குனர் செல்வராகவனை டேட் செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் என்னடா கன்றாவி இது என முகம் சுழித்தனர். தொடர்ந்து பேசிய அவர், நான் செல்வராகவனின் பெரிய ரசிகன். அவரை பற்றி நிறைய கற்றுக் கொள்ள நிறைய விரும்புவதால் டேட் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

இதனால் தான் கவின் வான்டடாக வெளியேறினாரா..? - விவரம் அறிந்தவர்கள் கூறும் காரணம்

Image
பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் மக்கள் எலிமினேட் செய்யாமல் தானாகவே வெளியே சென்றவர் சீரியல் நடிகர் கவின். இவர் நிகழ்ச்சி முடிய 10 நாட்களே உள்ள நிலையில் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். அவர் வெளியேறியதில் இருந்து லாஸ்லியா மற்றும் சாண்டி கடும் சோகத்தில் உள்ளனர். இவர் ஏன் நிகழ்ச்சி முடிவதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அதாவது கவினுக்கு ஒரு நாளைக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க 30 ஆயிரம் வீதம் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த 95 நாட்களுக்கும் 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஒருவேளை மீதமுள்ள இந்த 5 நாட்கள் இருந்திருந்தால் ஒன்றரை லட்ச ரூபாய் தான் கிடைத்திருக்கும். எனவே, தற்போது கிடைத்துள்ள 5 லட்சத்தை வீணாக்க வேண்டும் என்று கவின் முடிவு செய்து இப்படி அதிரடியாக வெளியே கிளம்பிவிட்டார் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

பிக்பாஸ் கவினின் தாயாருக்கு 5+2 ஏழு ஆண்டுகள் சிறை தண்டணை - என்ன காரணம் தெரியுமா..>

Image
பிக்பாஸ் கவினின் தாயார் ராஜலக்ஷ்மி 1998-ம் ஆண்டு முதல் 2006 -ம் ஆண்டு வரை எந்த வித அனுமதியும் பெறாமல் சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர்.  இந்த சீட்டு கம்பெனியில் 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் தங்களுடைய பணம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை தங்களுக்கு பெற்று தர வேண்டும் எனவும் கடந்த 2007 -ம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் இறந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு மோசடி வழக்கில் 5 வருட சிறை தண்டனை யும் 1,000 ரூபாய் அபராதமும் சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி 2 வருட சிறை தண்டனை யும் 2,000 ரூபாய் அபராதமும் என மொத்தம் 7 வருட சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு...