பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என கூறிய வரு.. - ராதிகா என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..!


பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் எல்லா துறைகளிலும் உள்ளது. ஆனால், அழகிகளின் கனவு கூடாரமான சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. 

சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைத்து அவர்களை வைத்து உடற்பசியை போக்கிக்கொள்ளும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை. பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை நடக்கிறது. 

சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை #MeToo மூலம் நடிகைகள் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் தமிழில் பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும், தான் இதுபோன்ற பிரச்னையை சந்தித்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். 

அதில், தான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட எனக்கு பட வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம் கூறினர். ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன். 

என்னை படுக்கைக்கு அழைத்த நபர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்த முடிந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் தங்களை பாதுகாக்க தயார் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

நடிகையாக மட்டுமல்லாது சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும், பெண்கள் நல பாதுகாப்பிற்கும் குரல் கொடுப்பவர் நடிகை வரலட்சுமி. பெண்கள் பாதுகாப்புக்காக சேவ் சக்தி என்ற அமைப்பையும் இவர் நடத்தி வருகிறார். 

இவரின் இந்த பேச்சுக்கு வரலக்ஷ்மியின் சித்தியான ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் சரியா சொல்லியிருக்க வரு.. உனக்கு பலமாக இருக்கிறேன் என கூறியுள்ளார். அவரது இந்த டிவிட்டை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.