ஒரே ஷாட்டில் முழு படம் - முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் தில்லாக நடித்துள்ள தன்ஷிகா..!


இளம் நடிகை சாய் தன்ஷிகா கடந்த 2006-ம் ஆண்டு வெளியான மனதோடு மழைக்காலம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானர். கிட்டத்தட்ட சினிமாவில் 15 ஆண்டுகளாக இருக்கும் இவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு வரமுடியவில்லை.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "கபாலி" படத்தில் அவருக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையானார். ஆனால், அதற்கு முன்வே மாஞ்சா வேலு, பேராண்மை, அரவான், பரதேசி என பல படங்களில் நடித்திருந்தார். பின் தொடர்ந்து சோலோ, விழித்திரு, காலக்கூத்து என படங்களில் நடித்திருந்த இவர் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், இவருன் நடிப்பில் "சினம்" என்ற குறும்படம் வெளியாகியுள்ளது. உலகம் முழுக்க 36 இடங்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச திரை விழாக்களிலும் இப்படம் இடம் பெற்றது. 

பல நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரம் என்றால் அது விலைமாதுவாக நடிப்பது தான். ஆனால், சாய் தன்ஷிகா இந்த படம் முழுக்க விபச்சார அழகியாக தன்ஷிகா நடித்துள்ளார். 

மொத்தம், 20 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தில் அவர் கவர்ச்சி, ஆபாசம் எதுவும் இல்லாம் நடித்துள்ளார். கதையின் நோக்கம் புரிந்து கொண்டதால் தான் அவர் இதில் நடித்துள்ளார். 

முன்னணி இயக்குனர் பாலாவிடம் பணியாற்றிய ஆனந்த் மூர்த்தி என்பவர் தான் இயக்கியுள்ளாராம். இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த படம் முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்பது தான்.