நடிகை மஹிமா நம்பியார் தமிழ் சினிமாவில் முதன்முறையாக சாட்டை என்ற
திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனை தொடர்ந்து எண்ணமோ நடக்குது,
மோசகுட்டி ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார்,
ஆனால் இவர் நடித்த குற்றம்
23 என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.பின்பு இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்கள்
மனதில் இடம் பிடித்தார், அதேபோல் நடிகை மகிமா நம்பியார் தொடர்ந்து
திரில்லர் திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று வருகிறார்.
இந்நிலையில், தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள "அசுரகுரு" படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த அனைவரும் படத்தில் மஹிமா கதாபாத்திரம் சூப்பர் என்றும் மஹிமா சிறப்பாக நடித்திருக்கிறார் என்றும் பாராட்டி வருகிறார்கள்.
நடிகை மஹிமா தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திலும் ஒரு டிடக்டிக் ஏஜண்டாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாறுபட்ட உடை மாறுபட்ட லுக்கிலே படம் முழுக்க நடித்து அசத்தியிருக்கிறார்.
இவற்றை தாண்டி இந்த படத்தில் மஹிமா ஒரு துப்பறிவாளியாக நடிப்பதால் புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கிறது. மஹிமா இயக்குனரின் கதாபாத்திர அமைப்பை சரியாக புரிந்து கொண்டு கதைக்கு இது தேவை என்பதற்காக புகைப்பிடிப்பது போல நடிதுல்லாரம்.



