ஒரே ஒரு போட்டோ போட்டா போதும் - சம்பளம் இத்தனை கோடியாம்..! - உச்சத்தில் பிரபல நடிகையின் மார்க்கெட்


பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார். அங்கு பிரபல பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை விழா ஒன்றில் சந்தித்தார். 

இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து ஹாலிவுட்டில் நடக்கும் சினிமா விழாக்களுக்கு ஒன்றாக சென்று வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோல்டன் குளோப் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். 

அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸுடன் பங்கேற்றார். எங்கு சென்றாலும் தன்னுடைய கணவருடன் ஜோடியாகவே சென்று வருகிறார் பிரியங்கா.

மேலும்,அவ்வபோது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றுகிறார். இதனால், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 5 கோடி ஃபாலோவர்கள் உள்ளனர். 

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பொருளை விளம்பரப்படுத்தவும், அந்த பொருளுடன் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிடவும் 1.8 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறாராம் அம்மணி.

ஒரே ஒரு போட்டோ போட்டா போதும் - சம்பளம் இத்தனை கோடியாம்..! - உச்சத்தில் பிரபல நடிகையின் மார்க்கெட் ஒரே ஒரு போட்டோ போட்டா போதும் - சம்பளம் இத்தனை கோடியாம்..! - உச்சத்தில் பிரபல நடிகையின் மார்க்கெட் Reviewed by Tamizhakam on March 14, 2020 Rating: 5
Powered by Blogger.