பிரபல மாடலும், பாலிவுட் நடிகையுமானவர் ப்ரூனா அப்துல்லா. கடந்த 2007ஆம் ஆண்டு கேஷ் என்ற பாலிவுட் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் கவர்ச்சியாக நடனமாடியிருந்தார்.
பிறகு தமிழிலில் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். பிறகு ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்து வந்த ப்ரூனா கடந்த மே மாதம் ஆலன் ஃபிரேஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ப்ரூனாவிற்கு கடந்த 2019-ம் வருடம் ஆகஸ்ட் 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு "இசபெல்லா" என்று பெயர் சூட்டியுள்ளதாகக் கூறி புகைப்படம் வெளியிட்டு அதில், 'மை பர்த் ஸ்டோரி; என்ற தலைப்பில் தனது பிரசவ அனுபவம் குறித்து பகிர்ந்திருந்தார்.
தண்ணீருக்குள் அமர்ந்தபடி குழந்தை பெற்றெடுத்த இவரது அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தன. இந்நிலையில், "தற்போது கோவா-வில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்" என கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.



