அம்மாடியோவ்..! 2025-ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் தெரியுமா..? - அதிர்ச்சி ரிப்போர்ட்..!


உலகத்தின் பொருளாதாரம் தங்கத்தை அடிப்படையாக கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும் தங்கத்தின் விலை 2025-ம் ஆண்டு எவ்வளவு ரூபாயாக இருக்கும் என்பது குறித்து உலக பொருளாதார நிபுணர்கள் முதல் உள்ளூர் பொருளாதார நிபுணர்கள் வரை கணித்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

கடந்த 1990-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கத்தின் விலை வெறும் 320 ரூபாய். அது அடுத்த பத்து ஆண்டுகளில் படிப்படியாக உயர்ந்து 2000-ம் ஆண்டு 440 ரூபாயாக இருந்தது. அதாவது, பத்து ஆண்டுகளில் வெறும் 120 ரூபாய் ஏறியுள்ளது.

அதே தங்கம் ஒரு கிராம் 2004-ம் ஆண்டு இறுதியில் 585 ரூபாயாக உயர்ந்தது. அதாவது நான்கு ஆண்டுகளில் 145 ரூபாய் அதிகரித்தது. ஆனால், அடுத்த மூன்று ஆண்டுகள் கழித்து 2007-ம் ஆண்டு இறுதியில் 1080 ரூபாய் ஆனது. 

சுனாமிக்கு பின் தங்கம் விலை ( Gold Rate after Tsunami)


மூன்றே ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகியது. காரணம், 2004-ம் உலக நாடுகளை தாக்கிய சுனாமி என்ற பேரிடர் தான். சுனாமியால் பாதிக்கப்பட்டது என்னவோ உலகம் முழுதும் கடலோரத்தில் இருந்த மாகாணங்கள் தான். அப்படியிருக்கும் போதே தங்கம் விலை இரட்டிப்பாகி அன்று முதல் அசுர வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகின்றது.

இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏறக்குறைய 3500 ரூபாய். இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு என்பது உலக பொருளாதாரத்தை ஆட்டிப்படைத்துள்ளது. கிட்ட தட்ட மூன்று மாதங்கள் உலகின் பல நாடுகள் லாக் டவுன். சுனாமி பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பை விடவும் கொரோனா ஏற்படுத்திய பதிப்பு 100 மடங்கு அதிகம்.

கொரோனாவுக்கு பின் தங்கம் விலை ( Gold Rate after Corona )


கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரா தாக்கத்தினால் தங்கத்தின் விலை அடுத்த மூன்று ஆண்டுகளில் 300% முதல் 400% வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அதாவது, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 3500. அடுத்த மூன்று ஆண்டுகளில் 2025 இறுதிக்குள் ஒரு கிராம் தங்கத்தின் விலை 13,000 முதல் 15,000 என்ற விலையை தொடும் என கூறுகிறார்கள். எனில், ஒரு பவுன் தங்கத்தின் விலை 1 லட்சம் முதல் 1.20 லட்சம் வரை இருக்கும் என கூறுகிறார்கள்.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்