52 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..! - தெறிக்க விடும் அமலா - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் வீடியோ..!


இளம் நடிகை சமந்தாவின் சின்ன மாமியாரும் முன்னாள் பிரபல நடிகையுமான அமலா தமிழில் 1986 ஆம் ஆண்டு இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படம் மூலம் அறிமுகமானார். 

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றநிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினியுடன் வேலைக்காரன், மாப்பிளை, கமலுடன் சத்யா என முன்னணி நடிகர்களுடன் வலம்வந்த அமலா பாலிவுட் படங்கள் வரை நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

தமிழில் 1991 ஆம் ஆண்டு கடைசியாக கற்பூர முல்லை படத்தில் நடித்த இவர் நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.நாகர்ஜுனாவிற்கு இவர் இரண்டாவது மனைவி ஆவார்.

இவருக்கு ஒரே ஒரு மகன் அகில் தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். நாகர்ஜூனாவின் முதல் மனைவி லக்ஷ்மி டக்குபதிக்கு பிறந்தவர் தான் சமந்தாவின் கணவரும் நடிகருமான நாக சைதன்யா.

இந்நிலையில் நடிகை அமலா மீண்டும் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இவருக்கு இப்போது 52 வயது ஆகின்றது. ஆனால், இன்னனும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டிருக்கிறார்.இளைஞர்கள் தூக்கும் அளவுக்கு வெயிட்டை ஐவரும் அசால்டாக தூக்கி கெத்து காட்டுகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 52 வயசிலும் இப்படியா என வாயை பிளந்து வருகிறார்கள்.

52 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..! - தெறிக்க விடும் அமலா - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் வீடியோ..! 52 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..! - தெறிக்க விடும் அமலா - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 23, 2020 Rating: 5
Powered by Blogger.