சமீப காலமாக நடிகைகள் தங்களை தாங்களே விளம்பர படுத்திக்கொள்ள படாத பட்டு வருகிறார்கள். அதற்கு அவர்களுக்கு பெரும் உதவியாக இருப்பது சமூக வலைத்தளங்கள் தான்.
இப்படியான சமூக வலைதளங்களில் ரசிகர்கள் போடும் கமெண்ட்களுக்காகவும், லைக்ஸ்களுக்காகவும் சிட்டாக பறந்து வருகிறார்கள் திரையுலக சிட்டுகள்.
இதன் முதற்கட்டம், இலை மறை காய் மறையாக போட்டோஷூட் செய்வது, ஏதாவது பிரபலத்தின் மீது பாலியர் புகார் சொல்வது என்று விவாகரத்தான அமலாபால் முதல், அக்கட பூமியில் இருந்து இறக்குமதியான ஸ்ரீரெட்டி வரையில் சமூக வலைத்தளங்களின் லைக்ஸ்களுக்காக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், கிட்டதட்ட சினிமாவை விட்டே ஓரங்கட்டப்பட்ட பழைய நடிகைகளையும் விடவில்லை. தமிழ் சினிமாவில் 90களின் காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கிரண் ரத்தோட்.
கவர்ச்சி நடிகையாக குத்தாட்டம் போட்டிருந்தாலும் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தவர். இந்தி சினிமாவில் அறிமுகமானாலும், நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
விக்ரமுடன் ஜெமினி, கமலுடன் அன்பே சிவம். பிரசாந்துடன் வின்னர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். அதன் பின் சரியான வாய்ப்பு கிடைக்காமல் குத்தாட்டம் போட ஆரம்பித்தார். ஆனால், வண்டி ஓடவில்லை. எனவே, கடந்த 2007-ம் ஆண்டு கல்யாணம் செய்துக் கொண்டு செட்டிலானார்.
அதன் பிறகு, சில துக்கடா படங்களில் நடித்து கல்லா கட்டி வந்த அம்மணி சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதனால், 90s கிட்ஸ்களுக்கு மட்டும் கனவுக்கன்னியாக இருந்த இவர் 2k கிட்ஸுக்கும் கனவுக்கன்னியாகி விடுவார் போல இருக்கு என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Tags
kiran rathod