லாக்டவுன் - செம்ம ஹாட் பேக் போஸ் கொடுத்து ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய நடிகை சுரேகா வாணி.!


ஆந்திராவை சேர்ந்த குணசித்திர நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

அந்த வகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார். இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார்.

இவர் முதன் முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது ஜன்னல் அருகே நின்று கொண்டு பேக் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. இதனை பார்த்த ரசிகர்கள், இது சுரேகா வாணி..? அல்லது அவரது மகள் சுப்ரிதாவா..? என்று கேட்டு குழம்பி வருகிறார்கள்.


--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்