நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் உருவாக்கி தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆந்திராவை சேர்ந்த இவர் ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார்.
பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அவர் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அதையடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்துக்கொன்று மேலும் பிரபலமானார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது குண்டாக பொசு பொசுவென இருந்த இவர் தற்போது கணிசமாக உடல் எடை குறைத்து மீண்டும் சிக்கென மாறியுள்ளார்.
சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அம்மணி ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சிகரெட் டப்பா இருப்பதை கவனித்த நெட்டிசன்கள் "தனியாக இருக்கும் உங்கள் வீட்டில் இது எப்படி வந்தது..? எதுக்கு சிகரெட் பாக்கெட்..?" என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.