சென்னை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து பிரபல நாடி ஜோதிடர் பாபு தனது ஜீவநாடி கணிப்புகளை புதுப்பித்துள்ளார்.
ஆளும் திமுக கூட்டணிக்கு இன்னும் கூடுதல் பலம் இருப்பதாகவும், அதிமுக கூட்டணியின் இடங்கள் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், தமிழக வெற்றி கழகம் (தவெக) கணிசமான இடங்களை கைப்பற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாடி ஜோதிடர் பாபு தனது கணிப்பில் திமுக கூட்டணி 110 முதல் 130 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 80க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்றும் கூறியிருந்தார்.
தமிழக வெற்றி கழகம் (தவெக) வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் அவர் முன்பு தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது தனது கணிப்பை மீண்டும் பரிசீலித்த பாபு, மக்களின் மனம் மாறியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். “ஆளுங்கட்சியான திமுகவிற்கு இன்னும் கூடுதல் பலம் இருந்தாலும், அதிமுக கூட்டணி 80க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து 60 இடங்களுக்கு குறையும் வாய்ப்பு உள்ளது.
அதே சமயம், தமிழக வெற்றி கழகம் முன்பு கணிக்கப்பட்ட 23 இடங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன” என்றும் தேர்தலுக்கு பின் அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணியை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளதாக அவர் விளக்கியுள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், இந்த புதுப்பிக்கப்பட்ட கணிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைமையில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக பாபு கூறினாலும், அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியின் செயல்பாடு மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் புதிய அரசியல் நகர்வுகள் மக்களிடையே குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடி ஜோதிடர் பாபு, அகத்தியர் ஜீவநாடி அடிப்படையில் பல ஆண்டுகளாக துல்லியமான கணிப்புகளை வெளியிட்டு வருபவர். அவரது ஜோதிட கணிப்புகள் தமிழக அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் பரவலாக கவனம் பெற்று வருகின்றன. சமீபத்திய யூட்யூப் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கணிப்பு தேர்தல் முடிவுகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், ஜோதிட நம்பிக்கை கொண்ட மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் திமுக – அதிமுக இடையேயான பாரம்பரிய போட்டியில் தவெக போன்ற புதிய சக்திகள் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இப்போது முக்கிய பேச்சாக உள்ளது.
நாடி ஜோதிடர் பாபுவின் இந்த இறுதி கணிப்பு தமிழக அரசியல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. 2026 தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இத்தகைய ஜோதிட கணிப்புகளை எப்படி எதிர்கொள்கின்றன என்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் விவரங்கள் வெளியாகும் போது, தமிழக அரசியல் சூழல் எவ்வாறு மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
English Summary : Nadi astrologer Babu has updated his prediction for the 2026 Tamil Nadu assembly election. The DMK alliance is expected to retain more strength, while the AIADMK alliance may win around 60 seats. The Tamilaga Vettri Kazhagam is likely to secure over 60 seats as public opinion has shifted.

