விஜய் நடிக்க மறுத்து பிறகு அஜித் நடித்து ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் - இயக்குனரே கூறிய தகவல்..!


தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமா வரலாற்றில் பல நடிகர்கள் பல படங்களை பல்வேறு காரணங்களுக்காக நடிக்க மறுத்து பிறகு அதே படம் வேறொரு நடிகரின் நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த பல நிகழ்வுகள் நடந்துள்ளன.

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். தனக்கென தனி ரசிகர் வட்டம் இருந்த போதும் அவர்களை எந்த விதமான சுயநலனுக்காகவும், அதாவது விளம்பரங்களில் நடிப்பது. ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமான கருத்துக்களை படங்களில் சொல்வது என எந்த விதமாக விஷயத்துக்குள்ளும் தன்னை நுழைத்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார். 

இவருடைய படங்களில் இவருக்கு தெரியாமல் கூட அரசியல் சம்பத்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக தயார் ஆகி வருகிறது. 

அஜித்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் இவரது ஆரம்பக்கால படங்கள் தான். அந்த வகையில் அவர் "அட்டகாசம்" என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியிருந்தார். 

படமும் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனது. ஆனால், இந்த கதியில் முதலில் நடிக்கவிருந்தது விஜய் தானாம். சில காரணங்களால் விஜய் தவிர்த்து விட பிறகு தான் அது அஜித் கைக்கு சென்றதாக  படத்தில் இயக்குனர் சரண் கூறியுள்ளார்.

விஜய் நடிக்க மறுத்து பிறகு அஜித் நடித்து ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் - இயக்குனரே கூறிய தகவல்..! விஜய் நடிக்க மறுத்து பிறகு அஜித் நடித்து ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் - இயக்குனரே கூறிய தகவல்..! Reviewed by Tamizhakam on April 23, 2020 Rating: 5
Powered by Blogger.