வீட்டுக்குள்ளேயே தலை தெறிக்க ஓடும் சிம்பு - மரண பங்கம் பண்ணும் நெட்டிசன்கள்..! - வைரலாகும் வீடியோ..!


சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் வீட்டிற்குள்ளே உடற்பயிற்சி செய்வது சமையல் செய்வது என வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் சிம்பு தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டுக்குள்ளேயே ஓடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை கிண்டலடித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.