வெறித்தனம் - "திரௌபதி" பட இயக்குனரின் அடுத்த பட தலைப்பு இது தான்..? - மாஸ் அப்டேட்..!


"திரௌபதி" என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் மோகன் ஜி-யின் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக பலரும் வெறித்தனமாக காத்துக்கொண்டிருகிறார்கள்.

இந்நிலையில், நடிகை நஸ்ரியா, பஹத் பாசில் நடிப்பில் வெளியான TRANCE படத்தை மோகன் ஜி தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்ற கருத்துக்கள பரவலாக வந்துகொண்டிருந்தன.

இதற்கு பதிலளித்த மோகன் ஜி, " இப்போதைக்கு நமக்கு TRANCE தேவையில்லை. அதை விட இன்னொன்னு இருக்கு. அந்த ஃபர்னீச்சரை முதலில் உடைச்சுட்டு இதெல்லாம் அப்புறம் பண்ணலாம்" என பதில்கொடுத்துள்ளார்.

இந்நிலையில், மோகன் ஜி அவர்களின் அடுத்த படம் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிக்கொண்டு கடவுளை நம்புபவர்களையும் மற்றும் ஒரு குறிப்பிட்ட மத உணர்வுகளையும், நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்து பேசியே பிழைப்பை நடத்தும் ஒரு சிலரின் முகத்திரையை கிழிக்கும் விதமாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இவர் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு "ஜெய் ஸ்ரீராம்" என்ற தலைப்பை வைக்கவுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், தன்னுடைய அடுத்த படம் குறித்து இயக்குநர் மோகன் ஜி எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெறித்தனம் - "திரௌபதி" பட இயக்குனரின் அடுத்த பட தலைப்பு இது தான்..? - மாஸ் அப்டேட்..! வெறித்தனம் - "திரௌபதி" பட இயக்குனரின் அடுத்த பட தலைப்பு இது தான்..? - மாஸ் அப்டேட்..! Reviewed by Tamizhakam on April 06, 2020 Rating: 5
Powered by Blogger.