"இவனுங்கள உயிரோட விட்டா நாட்டுக்கு கேடு.. கொளுத்தி விட்ரனும் அப்படியே.." - திரௌபதி இயக்குனர் ஆதங்கம்..!
வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அந்த மாணவி.. 15 வயது ஆகிறது.. பென்னாத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு இப்போதுதான் படித்து முடித்துள்ளார். இந்த மாணவியின் வீட்டு பாத்ரூமில் மேற்கூரை இல்லை போலும்.. அதை வீட்டில் உள்ள பெரியவர்களும் சரி செய்ய காணோம்.சில நாட்களுக்கு முன்பு பாத்ரூமில் இவர் குளித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஆகாஷ் என்பவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த ஆகாஷூக்கு பூனை கண்ணன் என்று இன்னொரு பட்ட பெயரும் உள்ளதாம். 22 வயசாகிறது.குளிப்பதை வீடியோ எடுக்க போன பூனை கண்ணன், தன்னுடன் பிளஸ்-2 முடித்துள்ள 17 வயது சிறுவர்களையும் அழைத்து சென்றுள்ளார். 3 பேருமாக சேர்ந்துதான் வீடியோ எடுத்துள்ளனர்.. இது எதுவுமே சிறுமிக்கு தெரியாத நிலையில், ஒருவாள் மாணவியை நேரில் பார்த்து ஆசைக்கு இணங்கும்படி தொல்லை தந்துள்ளனர். வீடியோ எடுத்திருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் முதலில் இதை மாணவி நம்பவே இல்லை.. அதற்கு பிறகு 3 பேரும் சேர்து வீடியோவை செல்போனுக்கு அனுப்பியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. அந்த வீடியோவையும் மாணவிக்கு அவர்கள் அனுப்பவில்லை, சொந்தக்காரரின் செ...