சிம்ரனா இது..? - நம்பவே முடியலையே..?! - புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!


‘வி.ஐ.பி.’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சிம்ரன். இந்தப் படம் 1997ல் வெளியான அதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பும், நடனமும் எல்லோருக்கும் பிடிக்கும். 

அந்த சமயத்தில் இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், உருதி, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் இவர் அஜீத், விஜய், பிரசாந்த், விஜயகாந்த், முரளி உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இடையில் அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தார். 

தற்போது மறுபடியும் ரீஎண்ட்ரி என்பது போல் ரஜினி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார் நடிகை சிம்ரன். சமீபத்தில், "மாஸ்டர்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், சிம்ரனா.. இது..? என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.


Previous Post Next Post
--Advertisement--