அசிங்கம் புடிச்ச.. இதை நான் எதிர்பாக்கல.. சக நடிகையை மேடையில் விளாசிய சிம்ரன்..!
தமிழ் சினிமாவின் 90களின் காலகட்டத்தில் தனது இடையழகு, நடனம், மற்றும் நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். கன்னத்தில் முத்தமிட்டால், துள்ளாத மனமும் துள்ளும், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் அவரது பங்களிப்பு இன்றும் கொண்டாடப்படுகிறது. சமீபத்தில், குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் தோன்றி, “சுல்லதானா” பாடலில் தனது நடனத்தால் மீண்டும் கவனம் ஈர்த்தார். அடுத்ததாக, டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து வரும் சிம்ரன், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.இந்நிலையில், சமீபத்தில் ஒரு விருது விழாவில் சிம்ரன் பேசிய ஒரு விஷயம் இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில், ஒரு நடிகையைப் பற்றி அவர் பகிர்ந்த அனுபவம், ரசிகர்களிடையே பல ஊகங்களைத் தூண்டியுள்ளது. சிம்ரன் கூறியதாவது: “ஒரு படத்தில் ஒரு கோ-ஸ்டாரின் நடிப்பைப் பார்த்து, ‘உங்களை இந்த ரோலில் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது’ என்று ஒரு நடிகைக்கு மெசேஜ் அனுப்ப...