காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதையடுத்து ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழை அடுத்து கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர் கவர்ச்சிகாட்டமாட்டேன் என்ற ஒரு கண்டிஷனை போட்டிருந்தார்.
இதனால் பல இயக்குனர்கள் அவரை அணுக தயக்கம் காட்டினர். சமீபத்தில் அவர் ஸ்ரீகாந்துடன் நடித்த ‘நம்பியார்’ படமும் வெற்றிபெறவில்லை.இவர் நடிப்பில் அவ்வப்போது படங்கள் வெளியானாலும் அம்மணியின் சினிமா வாழ்க்கைக்கு கை கொடுக்கும் விதமாக எந்த படம் அமைவது இல்லை.
இதனால், திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறாராம் அம்மணி. கடந்த சில நாட்களாக இவரது திருமணம் குறித்து சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆம், அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் அவர்களின் தம்பி கிருஷ்ணாவை நடிகை சுனைனா திருமணம் செய்துகொள்ளவிருகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் சில மாதங்களில் அவரை திருமணம் செய்ய உள்ளதாக நடிகரும், பிரபல பத்திரிகையாளருமான ரங்கநாதன் அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் இன்னும் சுனைனா தரப்பில் இருந்தோ, நடிகர் கிருஷ்ணா தரப்பில் இருந்தோ உறுதிபடுத்தப்படாத நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
நடிகர் கிருஷ்ணாவிற்கு ஏற்கனவே ஹேமலதா ரங்கநாதன் என்ற பெண்ணுடன் திருமணமாகி குறுகிய காலத்திலேயே விவாகரத்து ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.