வயதான நடிகைகளுடன் POOL பார்ட்டி.. போதையில் ஆடையின்றி கிடக்கும் பிரபலங்கள்.. வைரல் வீடியோ!
மெட்ரோ மெயில் யூட்யூப் சேனலில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவில் மது மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு குறித்து விரிவாகப் பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 1960கள் மற்றும் 1970களில் இருந்து தமிழ் திரையுலகில் மது மற்றும் புகைப்பழக்கம் பரவலாக இருந்ததாகவும், ஆனால் கொக்கைன் போன்ற கடுமையான போதைப் பொருட்களின் பயன்பாடு அப்போது மிகவும் அரிதாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். சபிதா ஜோசப், பழம்பெரும் நடிகர் பி.யு.சின்னப்பாவை உதாரணமாகக் குறிப்பிட்டார். அவர் படப்பிடிப்பு தளத்திற்கு கள்ளு அல்லது மது அருந்திவிட்டு வருவது வழக்கமாக இருந்ததாகவும், அவரது பீடி நாற்றம் மற்றும் மது வாசனையால் சக நடிகை பானுமதி பெரிதும் புலம்பியதாகவும் கூறினார். ஒரு சம்பவத்தில், பி.யு.சின்னப்பாவின் மது நாற்றத்தால் தாங்க முடியாமல், பானுமதி ‘ரத்தினகுமார்’ படப்பிடிப்பு தளத்தை விட்டு பின்பக்க வழியாக வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து, சின்னப்பா மன்னிப்பு கேட்டு, அந்த படப்பிடிப்பு முடியும் வரை மது அருந்துவதை நிறுத்தியதாக சபிதா விவரித்தார். மற்றொரு உதார...