"ஒரு கையில் மதுக்கோப்பை - மறுகையில்..." - உத்தமபுத்திரன் நடிகை வெளியிட்ட புகைப்படம் - என்ன கண்றாவி இது..?


இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தெய்வத்திருமகள் இத்திரைப்படத்தில் நடிகர் எம்எஸ் பாஸ்கரின் மனைவியாக குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை சுரேகா வாணி. 

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய நான்கு மொழி திரை படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் தமிழில் முதல்முறையாக நடிகர் தனுஷின் உத்தமபுத்திரன் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். 

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சுரேகா வாணி தொடர்ந்து தமிழில் காதல் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், விஜயின் மெர்சல், அஜித்தின் விசுவாசம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். 

தற்போது 40 வயதை கடந்துள்ள சுரேகா வாணி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை. ஊரடங்கு காரணமாக நடிகைகள் பலரும் வீட்டில் சமைப்பது,துணி துவைப்பது என பல வேலைகளை செய்து வருகிறார்கள். 

அந்த வகையில், சமையல் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த சுரேகா வாணி ஒரு கையில் மதுக்கோப்பையில் ஒயினையும், மறுகையில் மாம்பழத்தையும் வைத்துக்கொண்டு இந்த வித்தியாசமான காம்பினேஷனை இன்று முயற்சிக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.

** என்ன கன்றாவி காம்பினேஷன் இது...?


--- Advertisement ---