தயவுசெஞ்சி அஜித் மற்றும் சிம்புவின் இந்த படங்களை பாக்காதிங்க - கௌதம் மேனன் அதிரடி..! - என்ன காரணம்..?


இயக்குனர் கௌதம் மேனன் படங்களுக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குனர்கள் மட்டுமே தங்களுக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்துள்ளார்கள். தான் இயக்கிய முதல் படமான "மின்னலே" படத்திலேயே பிடித்து விட்டார் கௌதம்.

இப்போது, நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான TRANCE படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் ஹீரோவாக நடிக்க, கிருஸ்துவ மதத்தை வைத்து நடக்கும் ஹைடெக் கொள்ளை மற்றும் ஏழைகளை குறிவைத்து மதம் மாற்றும் மிஷினரிகளின் முகத்திரையை கிழிக்கும் விதத்தில் இந்த TRANCE திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மலையாளத்தில் இருந்தாலும், தமிழிழ் படம் பார்த்தது போலவே ஒரு உணர்வை கொடுத்தது இந்த படம்.

இந்த படத்தில் மிஷினரிகளை இயக்கம் முக்கியப்புள்ளியாக கதாபத்திரத்தில் தில்லாக நடித்திருந்தார். கௌதம் மேனனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், தயவு செய்து அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் சிம்புவின் அச்சம் என்பது மடமையாடா படத்தை பார்க்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

இப்போது, ஊரடங்கு காரணமாக படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த இரண்டு படங்களையும் பார்க்க வேண்டாம். அதில், ஹீரோக்கள் ஊர் சுற்றுவது போல காட்சிகள் அதிகம் உள்ளது. ஊரடங்கு இருக்கும் நிலையில் அந்த படங்களையெல்லாம் பார்க்காதீர்கள். வாரணம் ஆயிரம் பாருங்கள். மன அழுத்தத்திற்கு ஆளான ஹீரோ எப்படி தன்னை தயார் செய்கிறார் என்பதை காட்டியிருப்பேன் என கூறியுள்ளார்.

--- Advertisement ---