"ச்சை... பெண்கள் என்றால் இதுக்கு தானா..?" - ரசிகர் வெளியிட்ட புகைப்படம் - கடும் கோபத்தில் "மாஸ்டர்" மாளவிகா..!


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், மாஸ்டர். 

விஜய் ரசிகர் ஒருவர், ஊரடங்கு நேரத்தில், மாஸ்டர் படத்தில் நடித்தவர்கள் ஒன்றாக இருப்பது போல, ஒரு கார்ட்டூன் வரைந்து இணையத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பாடல் கேட்பது, இணையம் பார்ப்பது, விளையாடுவது என்று இருக்க, மாளவிகா மோகனன் சமையல் செய்வது போல் இருந்தது. 

இதைப் பார்த்த மாளவிகா, 'கற்பனையில் கூட, பெண்ணின் வேலை சமைப்பது தானா? ச்சை!' என, கோபத்துடன் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து, அந்த ரசிகர், கார்ட்டூனை மாற்றி, மாளவிகா, புத்தகம் படிப்பது போல வரைந்து பதிவிட்டார். 'மாளவிகாவின் கோபம் நியாயமானது' என, பலரும் பாராட்டுகின்றனர்.

ஆனால், இந்த விஷயத்துக்கு இம்புட்டு கோவம் ஆவதும்மா என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

"ச்சை... பெண்கள் என்றால் இதுக்கு தானா..?" - ரசிகர் வெளியிட்ட புகைப்படம் - கடும் கோபத்தில் "மாஸ்டர்" மாளவிகா..! "ச்சை... பெண்கள் என்றால் இதுக்கு தானா..?" - ரசிகர் வெளியிட்ட புகைப்படம் - கடும் கோபத்தில் "மாஸ்டர்" மாளவிகா..! Reviewed by Tamizhakam on April 28, 2020 Rating: 5
Powered by Blogger.