லாக்டவுன் நேரத்திலும் ஜாலி பிக்னிக் - காதல் கணவருடன் கும்மாளம் போட்ட பிரபல நடிகை..! - வைரல் வீடியோ..!


செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபத்யாய. அதன் பிறகு அவர் சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்தார். 

பின்பு அவர் நடிப்பை நிறுத்தி விட்டு அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தார். கல்லூரியில் படித்தபோது அவருக்கும், சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 

இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு டிசம்பர் மாதம் அவர்களுக்கு அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது. 

ஜோ கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி மற்றும் ரிச்சா இந்து என்பதால் இந்து முறைப்படி என இரண்டு முறைப்படியும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த லாக்டவுன் நேரத்திலும் கணவருடன் பிக்னிக் சென்றுள்ளார் ரிச்சா. இதுபற்றி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கலிபோர்னியாவின் எல்லையில் உள்ள ஒரேகான் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ள ரிச்சா, அங்கு ஜாலியாக பொழுதை கழித்துள்ளார். கூடவே சமூக இடைவெளியை யும் இருவரும் கடைபிடித்தார்களாம்.
Previous Post Next Post
--Advertisement--