திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லையே..! அதற்கு இப்படியா..? - பிரபல நடிகை செய்த வேலை - ரசிகர்கள் ஷாக்..!


தமிழ் திரையுலகில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை சுவாதி. இவர் தமிழில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா', 'வடகறி', 'யட்சன்', 'யாக்கை' என சில படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது, அந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குக் காதலாக மலர்ந்தது.

இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து சுவாதி எந்த நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடிக்கவில்லை.

வழக்கமாக தனது காதல் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வரும் சுவாதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் சேர்ந்து இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் அதிரடியாக நீக்கியுள்ளார்.

எதனால் நீக்கினார்..? இருவருக்கும் எதோ பிரச்சனை போல என தெலுங்கு சினிமா ஊடகங்கள் பரபரப்பாக பேசி வருகின்றன. இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்வாதி. அதில் ஆர்சீவ்ஸில் அவரது கணவர் படங்கள் இருக்கின்றன. 

தேவைப்படும்போது அவை முன்னே வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏதோ பிரச்னை என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கிசுகிசுகித்து வருகிறார்கள்.

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லையே..! அதற்கு இப்படியா..? - பிரபல நடிகை செய்த வேலை - ரசிகர்கள் ஷாக்..! திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லையே..! அதற்கு இப்படியா..? - பிரபல நடிகை செய்த வேலை - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on April 19, 2020 Rating: 5
Powered by Blogger.