அந்த நடிகரால் தான் டான்ஸ் ஆடவே யோசிக்கிறேன்..! - மெட்டி ஒலி சாந்திக்கு ஏற்பட்ட அவமானம்..!


தொலைக்காட்சி தொடர்கள் சினிமா ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும். இழுவை, அழுகை என ஓடிக்கொண்டிருந்த சீரியல்கள் தற்போது சினிமா ரேஞ்சுக்கு அடுத்தடுத்து டிவிஸ்டுகள், காட்சி அமைப்புகள் இருக்கின்றன.

சேனல்கள் பெருகி விட்ட இந்த கால கட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்கள் வேறு வேறு சேனல்களில் ஒளிபரப்பாகி கொண்டிருகின்றனஅந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம் பிரபலமாகும் பல நடிகைகள் உள்ளனர். 

சீரியலில் நடித்து பிரபலமாகி சினிமா ஹீரோயின் ஆன நடிகைகள் கதைகளும் நடக்கின்றன. 90களில் ஒளிபரப்பான அனைவராலும் மறக்கமுடியாத ஒரு சீரியல் மெட்டி ஒலி. இன்றும் அந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ்.குறிப்பாக இந்த தொடரின் பாடல் மிக மிக பிரபலம்.

அம்மி அம்மி அம்மி மிதித்து, அருந்ததி முகம் பார்த்து என தொடங்கும் அந்த பாடல் அனைவரையும் தாளம் போட வைக்கும். அந்தவகையில் அந்த சீரியலின் தொடக்க பாடலில் ஆட்டம் போட்டு மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகைதான் சாந்தி மாஸ்டர்.

நன்கு நடமாடக்கூடிய இவர் தனது 13 ஆம் வயதிலிருந்தே குரூப் டான்சராக இருந்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்ட இவர் பிறகு அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டராக ஆகி பின்பு அதிகமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் கஷ்டப்பட்டு முன்னேறி டான்ஸ் மாஸ்டராக ஆனார்.

பல படங்களில் குருப் டான்சர்களின் ஒருவராக தோன்றி மறைவார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் இவர் பட்ட ஒரு சில வேதனையான சம்பவங்களை பற்றி கூறியுள்ளார். 

தெலுங்கில் இவர் ஒரு படத்தில் நடனமாடியபோது ஒரு முன்னணி நடிகரால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். அதனால், மிகவும் பயந்து போய்விட்டாராம்.அதன் பிறகு நடனம் என்றாலே பயம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

அந்த நடிகரால் தான் டான்ஸ் ஆடவே யோசிக்கிறேன்..! - மெட்டி ஒலி சாந்திக்கு ஏற்பட்ட அவமானம்..! அந்த நடிகரால் தான் டான்ஸ் ஆடவே யோசிக்கிறேன்..! - மெட்டி ஒலி சாந்திக்கு ஏற்பட்ட அவமானம்..! Reviewed by Tamizhakam on April 09, 2020 Rating: 5
Powered by Blogger.