உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் நடைபெற்ற விசித்திரத் திருமணம் தொடர்பான வீடியோக்கள் வைரலாகிய நிலையில், மூன்று சகோதரிகள் தங்கள் முடிவுக்கு மேலும் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள், திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கை முறை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளித்துள்ளனர்.

அம்ரோகா மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் உள்ள தௌரியா கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷ் (18) ஆகிய மூன்று சகோதரிகளும், தங்களது ரீல்ஸ் வீடியோக்களைப் படம்பிடித்து வந்த கேமராமேன் விகாஸை ஜூலை 17 அன்று மா சாமுண்டா தேவி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் நடைபெற்ற இந்த திருமணம், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

திருமணத்திற்குப் பிறகு பலர், “மூன்று பேரும் ஒரே வீட்டில் வாழ்ந்தால் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சகோதரிகள் வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியதாவது:
“உடலுறவு என்பது சில நிமிடங்கள் தான். ஆனால் எங்கள் உறவு என்பது காலம் முழுக்க நீடித்திருக்கக்கூடிய ஒன்று. எங்களுடைய பாசம் காலம் முழுக்க நீடித்திருக்கக்கூடிய ஒன்று.

நாங்கள் சகோதரிகள் எப்போதும் ஒன்றாக இருக்க விரும்புகிறோம் என்பது உண்மைதான். ஆனால், உடலுறவு என்பது தனித்தனியாகத் தான் இருக்கும்.
இதை நாங்கள் வெளியே சென்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் எங்களுடைய திருமணம் பற்றி பல கேள்விகள், நாங்கள் மதிக்கக்கூடிய பல பெரியவர்களிடமிருந்து வருகின்றன. எனவே இதனை வெளிப்படையாக நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது.

நாங்கள் சகோதரிகள் ஒன்றாக இருப்போம் என்றாலும், எங்களுடைய கற்பு தனிப்பட்ட விஷயம். எனவே கணவருடன் நாங்கள் தனிமையில் இருக்கும்போது தனித்தனியாகத் தான் இருப்போம்.”

இந்த விளக்கத்தின் மூலம், மூன்று சகோதரிகளும் தங்கள் உணர்வுப்பூர்வமான பிணைப்பை முன்னிலைப்படுத்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தனித்தன்மையைப் பேணுவதாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். விகாஸும் இதற்கு உடன்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, இந்தத் திருமணத்திற்கு இந்து திருமணச் சட்டத்தின்படி சட்ட அங்கீகாரம் இல்லை என்ற கருத்து தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. காவல்துறையினர் நான்கு பேரையும் விசாரித்துள்ள நிலையில், குடும்பத்திடமிருந்து புகார் வராததால் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
Summary in English : Three sisters in Uttar Pradesh’s Amroha district married their social media cameraman in a temple ceremony. They explained their lifelong bond as sisters remains strong and they wish to live together. Private time with their husband will be individual. The decision was mutual among the adults involved.