இந்த இக்கட்டான நிலையிலும் கட்டு கட்டாக கேட்ட நடிகை - கடும் அப்செட்டில் ஹீரோ..!


இந்த கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது உலகத்தையே திருப்பி போட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பல தரப்பட்ட தொழில்கள் முடங்கி போய்விட்டன. அதில், சினிமா தொழிலும் கடுமையான அடி வாங்கியுள்ளது.

படம் எடுத்து ரிலீஸ் செய்ய முடியவில்லை. தயாரிப்பாளர்கள் வாங்கிய கடன்களின் வட்டி ஒரு பக்கம் ஏறுகின்றது. மறுபக்கம் தியேட்டர்கள் இப்போதைக்கு திறக்கப்படுவது போல தெரியவில்லை.

கொரோனாவுக்கு மருந்து அல்லது தடுப்பூசி கண்டு பிடிக்காத வரை இந்த நிலை தொடரும் என்றே நம்ப படுகின்றது. முழுமையான மருந்து அல்லது தடுப்பூசி வெளியாக நிச்சயம் ஒரு ஆண்டு அவசியமானது.

இது சினிமா தயாரிப்பளர்களை மிகவும் பாதித்துள்ளது. இதனால், நடிகர்கள்,நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என பலரும் யோசனை கூறி வருகிறார்கள். இந்நிலையில், மும்பையை சேர்ந்த கோதுமை நிற நடிகை செய்துள்ள விஷயம் தயாரிப்பாளரை ஷாக் ஆக்கியுள்ளது.

பிரபல தெலுங்கு ஹீரோ நடிக்கும் படத்தில்ஹீரோயினாக நடிக்க கோதுமை நிற நடிகையை கேட்டிருகிறார்கள். ஏற்கனவே அதே ஹீரோவுடன் ஒரு படத்தில் நடித்துள்ள அந்த நடிகை அந்த படத்திற்கு முக்கால் கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

ஆனால், இப்போது ரவுண்டாக மூன்று சி வேண்டும் என்று கேட்கிறாராம். இதனால் ஷாக் ஆகிப்போன தயாரிப்பாளர் நடிகரிடம் விஷயத்தை சொல்ல கடும் அப்செட்டான அவர் உங்களுக்கு சரிவராதுன்னா வேற ஹீரோயின் மாத்திடுங்க என்று ஒரே வார்த்தையில் கூறி விட்டாராம். இதனால் வேறு நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இந்த இக்கட்டான நிலையிலும் கட்டு கட்டாக கேட்ட நடிகை - கடும் அப்செட்டில் ஹீரோ..! இந்த இக்கட்டான நிலையிலும் கட்டு கட்டாக கேட்ட நடிகை - கடும் அப்செட்டில் ஹீரோ..! Reviewed by Tamizhakam on May 17, 2020 Rating: 5
Powered by Blogger.