ஒரே ஒரு போட்டோ - ரசிகர்களின் ஆசையை தூண்டி விட்ட நடிகை சமந்தா..! - வைரலாகும் புகைப்படம்.!


உலகம் முழுதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி லட்சகணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுதும் போடாப்பட்டுள்ள ஊரடங்கால் மாதக்கணக்கில் மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள். 

இந்நிலையில் நடிகை சமந்தா, நாகசைதன்யா கடந்த சில நாட்களாக இருவரும் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு கார் ட்ரிப், பைக் ட்ரிப் என பறந்து கொண்டிருக்கின்றனர். 

இரண்டு தினங்களுக்கு முன் காரில் தங்களது செல்ல நாய்க் குட்டியுடன் ஜோடியாக ஐதராபாத்தில் வலம் வந்தனர் . இந்நிலையில் சமந்தா கணவருடன் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்லும் படத்தைப் பகிர்ந்திருக்கிறார். 

ஹெல்மெட் அணிந்து சைதன்யா பைக் ஓட்டுகிறார். சமந்தா பின்னாடி அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரது முதுகில் ஒரு பையும் கையில் ஹெல்மெட்டும் வைத்திருக்கிறார். பைக்கில் சென்று ஷாப்பிங் செய்தபோது எடுத்த படத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். 

ஷாப்பிங் செய்தபோது ஒருசிலர் சமந்தாவை அடையாளம் கண்டு ஹாய் சொல்லப் பதிலுக்குத் தனது வழக்கமான புன்னகையை உதிர்த்துவிட்டு சிட்டாக பறந்திருக்கிறார் சமந்தா.


சமந்தாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கும் பைக் ரைடு போகவேண்டும் என்று ஆசையாக உள்ளது. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த எங்களின் ஆசையை தூண்டி விட்டீர்கள் என்று கூறி வருகிறார்கள்.

ஒரே ஒரு போட்டோ - ரசிகர்களின் ஆசையை தூண்டி விட்ட நடிகை சமந்தா..! - வைரலாகும் புகைப்படம்.! ஒரே ஒரு போட்டோ - ரசிகர்களின் ஆசையை தூண்டி விட்ட நடிகை சமந்தா..! - வைரலாகும் புகைப்படம்.! Reviewed by Tamizhakam on May 16, 2020 Rating: 5
Powered by Blogger.