இப்போ எங்கப்பா போனீங்க..? - திரௌபதி இயக்குனர் மோகன் ஜி பொளேர்..! - வைரலாகும் வீடியோ..!


திரெளபதி படம் மூலம் தமிழ் நாட்டில் நிழல் உலகில் படுஜோராக நடந்து வரும் நாடக காதல் குறித்தும் அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்தும் பேசி சாட்டை சுழற்றியவர் இயக்குனர் மோகன் ஜி.

இந்த படத்தின் மூலம் பிரபலமானார் என்பதை விட இந்த படத்தால் ஏற்பட்ட சர்ச்சைகள் மூலம் பிரபலமானவர் என்றால் தான் சரியாக இருக்கும். இந்த படத்தை சாதிப்படமாக சித்தரித்தனர் சிலர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது பேச்சு குறித்து தனது கருத்தை தில்லாக பதிவு செய்துள்ளார் மோகன் ஜி.

இது குறித்து அவர் கூறியதாவது, திரெளபதி படம் வந்த போது எத்தனை பேர் பொங்கினீர்கள். இவ்வளவிற்கும் அப்பட்ம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நாடக காதல் விஷயத்தில் நீதிமன்றமே சொன்ன ஜட்ஜ்மெண்ட் காப்பியின் அடிப்படையில் தான் இயக்கப்பட்டது. அந்த நேரத்தில் எத்தனை தலைவர்கள் பொங்கினீர்கள்.

மீடியா காரர்கள் எல்லாம் என்னை பேட்டி எடுத்து அது ஒரு குறிப்பிட்ட சாதியை தாக்கும் விதமாக எடுக்கப்பட்ட படம் என்று எவ்வளவு அழுத்தம் கொடுத்தீர்கள். நீங்கள் எல்லாம் இப்போது எங்கே போனீர்கள்..?

தாழ்த்தப்பட்ட மக்களை காக்கிறேன் என சொன்ன தலைவர்கள் எல்லாம் அப்படத்துக்கு எதிராக பேசினீர்கள். நேற்று தாழ்த்தப்பட்ட மக்களை தவறாக ஒரு திமுக தலைவர் பேசினார் இப்போ எங்க போனிங்க நீங்க என மோகன் ஜி கேட்டுள்ளார். 

தலைமை செயலாளர் சண்முகம் தாங்கள் கட்சி உறுப்பினர்கள் கொடுத்த மனுக்களுக்கு உரிய முறையில் தங்களை சந்திக்காமல் இருந்ததால் தாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா..? மூன்றாம் தர மக்களை போல நடத்துவதா..? என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி இருந்தார். 

இது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமைக்கும் கூட கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக ஊடகங்களில் பெரும் அதிருப்தியை கிளப்பிய இந்த விஷயம் தொலைக்காட்சி மீடியாவில் அப்படியே இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

இப்போ எங்கப்பா போனீங்க..? - திரௌபதி இயக்குனர் மோகன் ஜி பொளேர்..! - வைரலாகும் வீடியோ..! இப்போ எங்கப்பா போனீங்க..? - திரௌபதி இயக்குனர் மோகன் ஜி பொளேர்..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 18, 2020 Rating: 5
Powered by Blogger.