சமீப காலமாக தொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா. சின்னத்திரையில் VJ வாக இருந்து நடிகையாக வலம் வருபவர் சித்ரா.
இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.
சமீபத்தில் சித்ரா வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் வைரல் ரகம். அந்த வகையில், ஹார்லி டேவிட்சன் பைக்கில் கவர்ச்சியான உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.