பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் இணையத் தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார் வாணி போஜன். சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்துக் கவனம் பெற்றார் வாணி போஜன்.
இதற்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் இணையத் தொடரில் அவர் கதாநாயகியாக நடிக்கிறார்.
முருகதாஸின் உதவி இயக்குநர் இந்தத் தொடரை இயக்கவுள்ளார். இதற்கு முன்பு தனது சிஷ்யர்கள் இயக்கிய எங்கேயும் எப்போதும் (சரவணன்), ரங்கூன் (ராஜ்குமார் பெரியசாமி) ஆகிய படங்களையும் முருகதாஸ் தயாரித்துள்ளார்.
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
அதே போல நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வரும் ராங்கி என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். கிட்ட தட்ட இந்த படத்தின் வேலைகள் முடிந்து விட்ட நிலையில் இந்த படத்தை ஆன்லைனில் வெளியிட பிரபல OTT தளம் ஒன்று கேட்டுள்ளது.
ஆனால், முருகதாஸ் முடியவே முடியாது படம் முதலில் திரையரங்கில் தான் ரிலீஸ் ஆகும் என்று மறுத்துவிட்டாராம்.



