"அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.." - கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய கவர்ச்சி நடிகை சோனா..!


நடிகர் அஜித் நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் நடிகை சோனா. அதனை தொடர்ந்து அதே ஆண்டு நடிகர் விஜய்யின் ஷாஜகான் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 2008-ம் ஆண்டு வெளியான குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக கவர்ச்சியில் அதகளம் காட்டினார் அம்மணி.

குசேலன் படத்திற்கு முன்பே சில தமிழ் படங்களில் கவர்ச்சி காட்டேரியாக சுழன்றடித்த இவர் நான் நமீதாவுக்கு போட்டி என்று ஓப்பனாக கூறினார். தமிழ் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. 

ஒரு கட்டத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பையும் ஏற்று கவர்ச்சி குத்து குத்தினார். சினிமா நடிப்பு மட்டுமில்லாமல், சொந்தமாக வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்தார். அதில் போதிய வருமானம் இல்லை. 

இதனால், சினிமா பக்கம் வந்த இவருக்கு வாய்ப்புகள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வர வில்லை வயது 30+ தான் என்றாலும் வயதான பெண் போல தொர்ரமளிததாலும், உடல் எடை அதிகமாக இருந்ததாலும் பல பட வாய்புகள் இவருக்கு கிடைக்காமல் போனது.

தற்போதும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா.? என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

மேலும், பல நடிகைகள் சொல்லவே கூச்சப்படும் ஒரு விஷயம் குடிப்பழக்கம். ஆனால், சோனா நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்று வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா 'பச்சமாங்கா' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். 

அந்தப் படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்திருப்பதைப் பார்த்து அவர் ஷகிலா வழியில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது. ‘பச்ச மாங்கா’ என்ற படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை, கவர்ச்சி, நெருக்கமான படுக்கை அறை காட்சிகளுடன் தயாராகி உள்ளது. 

இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சோனா, ஜாக்கெட், பாவாடை மட்டும் அணிந்து கணவருக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

வேறு ஆணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை சோனா, "பச்சமாங்கா திரைப்படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். இயக்குநர் பாலு மகேந்திரா போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் ட்ரெய்லரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதிக கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. 

கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்" 

இந்த "பச்சை மாங்கா" படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார் என்று யோசித்து பாருங்கள்? என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார். 

பச்சமாங்கா திரைப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சோனா.

"அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.." - கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய கவர்ச்சி நடிகை சோனா..! "அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.." - கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய கவர்ச்சி நடிகை சோனா..! Reviewed by Tamizhakam on May 12, 2020 Rating: 5
Powered by Blogger.