கடந்த வருடம் அதிகம் சம்பாதித்த உலக பிரபலங்கள் - அக்ஷய் குமாருக்கு 52வது இடம் - முதலிடத்தில் யார் தெரியுமா..?


உலக பிரபலம் பெற்ற பத்திரிக்கையான போர்ஃப்ஸ் வருடா வருடம் அதிக வருவாய் ஈட்டிய உலக பிரபலங்கள் என்ற பட்டியலை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.

அந்த வகையில், 2019-ம் வருடம் ஜுன் மாதம் முதல் 2020-ம் வருடம் மே மாதம் வரையில் உலகில் அதிக வருவாய் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய நடிகரான அக்ஷய்குமார் 48.5 மில்லியன் டாலர் வருவாய் பெற்று உலக அளவில் 52-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய ரூபாயில் 366 கோடி ரூபாய்.

முந்தைய ஆண்டான 2018 - 2019-ம் ஆண்டில் அக்ஷய்குமார் ஈட்டிய வருவாய் 466 கோடி ரூபாய். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 100 கோடி ரூபாய் குறைவுதான்.

இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கும் அக்ஷய்குமார் இந்த கொரானோ காலத்தில் நிவாரணத் தொகையாக 25 கோடியை ஏற்கெனவே தந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பல நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.

முதலிடத்தில் யார்..?


போர்ப்ஸ் பட்டியலில் 590 மில்லியன் டாலர் பெற்று 22 வயதான இளம் பெண் தொழிலதிபர் கிலீ ஜென்னர் (Kylie Jenner) முதலிடம் பெற்றுள்ளார். இவர் தனது 17-வது வயதில் மைக்கேல் ராய் ஸ்டீவன்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து செய்தார்.

அதனை தொடர்ந்து, தனது 19-வது வயதில் ட்ராவிஸ் ஸ்காட் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரையும் இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த வருடம் விவாகரத்து செய்து விட்டார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது, சிங்கிள் மாம்-ஆக இருக்கிறார். அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். மீடியா துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார்.

நமக்கு தெரிஞ்சவங்க  வேற யாராச்சும்...?

இந்த பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் அக்ஷய் குமார் தான். அதனை தொடர்ந்து, மல்யுத்த வீரரும், நடிகருமா Dwayne Johnson (aka) The Rock 87.6 மில்லியன் வருவாயுடன் 10வது இடத்திலும். நடிகர் ஜாக்கி சான் 46 மில்லியன் டாலர் வருவாயுடன் 80-வது இடத்தில் உள்ளார்.

கடந்த வருடம் அதிகம் சம்பாதித்த உலக பிரபலங்கள் - அக்ஷய் குமாருக்கு 52வது இடம் - முதலிடத்தில் யார் தெரியுமா..? கடந்த வருடம் அதிகம் சம்பாதித்த உலக பிரபலங்கள் - அக்ஷய் குமாருக்கு 52வது இடம் - முதலிடத்தில் யார் தெரியுமா..? Reviewed by Tamizhakam on June 06, 2020 Rating: 5
Powered by Blogger.