Posts

Showing posts with the label Akshay Kumar

"சிறை" திரைப்படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

Image
1990களின் தமிழ்நாடு. கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு சமூகத்தில் பரவிய இஸ்லாமிய வெறுப்பு, சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சம், நீதி தாமதமாகும் அவலம் – இவையெல்லாம் பின்னணியில் நகரும் ஒரு சாலைப் பயணக் கதைதான் 'சிறை'. வேலூர் சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்துக்கு ஒரு கொலை குற்றவாளியை அழைத்துச் செல்லும் ஆயுதப்படை போலீஸ் ஏட்டு கதிரவன் (விக்ரம் பிரபு). அந்தக் கைதி அப்துல் ரவூஃப் (எல்.கே. அக்ஷய் குமார்). பஸ்ஸில் தொடங்கும் அந்தப் பயணம், இருவரின் வாழ்வையும் தலைகீழாக மாற்றிப்போடுகிறது. கதிரவன் ஒரு நேர்மையான, கடமையுணர்வு மிக்க போலீஸ். மனைவியுடன் சின்னஞ்சிறு ஊடல்கள், நண்பர்களுக்காக அதிகாரிகளிடம் பேசும் தயக்கம் – இயல்பான வாழ்க்கை அவருக்கு. ஆனால் அப்துலை அழைத்துச் செல்லும் போது, பயணத்தில் நடக்கும் சில சம்பவங்கள் அவரை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன. அப்துல் ஐந்து ஆண்டுகளாக விசாரணைக் கைதியாகச் சிறையில் வாடுகிறான். அவனுக்கு வக்கீல் இல்லை, பிணை இல்லை – காரணம், அவன் முஸ்லிம் என்ற ஒற்றைப் பெயர். அப்துலின் கடந்த காலம் ஃப்ளாஷ்பேக்கில் வருகிறது: சிவகங்கை கிராமத்தில் கலையரசி (அனிஷ்மா அனில்...

கடந்த வருடம் அதிகம் சம்பாதித்த உலக பிரபலங்கள் - அக்ஷய் குமாருக்கு 52வது இடம் - முதலிடத்தில் யார் தெரியுமா..?

Image
உலக பிரபலம் பெற்ற பத்திரிக்கையான போர்ஃப்ஸ் வருடா வருடம் அதிக வருவாய் ஈட்டிய உலக பிரபலங்கள் என்ற பட்டியலை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், 2019-ம் வருடம் ஜுன் மாதம் முதல் 2020-ம் வருடம் மே மாதம் வரையில் உலகில் அதிக வருவாய் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது வெளியிட்டுள்ளது. அதில் இந்திய நடிகரான அக்ஷய்குமார் 48.5 மில்லியன் டாலர் வருவாய் பெற்று உலக அளவில் 52-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய ரூபாயில் 366 கோடி ரூபாய். முந்தைய ஆண்டான 2018 - 2019-ம் ஆண்டில் அக்ஷய்குமார் ஈட்டிய வருவாய் 466 கோடி ரூபாய். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 100 கோடி ரூபாய் குறைவுதான். இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கும் அக்ஷய்குமார் இந்த கொரானோ காலத்தில் நிவாரணத் தொகையாக 25 கோடியை ஏற்கெனவே தந்துள்ளார். அது மட்டுமல்லாமல் பல நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். முதலிடத்தில் யார்..? போர்ப்ஸ் பட்டியலில் 590 மில்லியன் டாலர் பெற்று 22 வயதான இளம் பெண் தொழிலதிபர் கிலீ ஜென்னர் ( Kylie Jenner ) முதலிடம் பெற்றுள்ளார். இவர் தனது 17-வது வயதில் மைக்கேல் ராய் ஸ்டீவன்சன் என்பவ...