"இதெல்லாம்......" - வனிதாவின் மூன்றாவது கல்யாணம் குறித்து விளாசிய லக்ஷ்மி ராம கிருஷ்ணன்..!


நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை வனிதாதிருமணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.நடிகை வனிதா விஜயகுமாருக்கும் பீட்டர் பாலுக்கும் நேற்று கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் முறையாக விவாகரத்து பெறமால் பீட்டர் பால், வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக அவரது மனைவி எலிசபெத்த ஹெலன் வடபழனி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

முறையாக விவாகரத்து அளித்த பிறகே வனிதாவை திருமணம் செய்து கொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பீட்டார் பால் - எலிசபெத் ஹெலன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் வனிதாவை பீட்டர் திருமணம் செய்துள்ளார்.இது குறித்து ட்வீட் செய்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் , தற்போது தான் இந்த செய்தியை பார்த்தேன். பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் செய்துள்ளார்.

இரண்டு குழந்தைகளும் உள்ளது. விவாகரத்தும் செய்யவில்லை.எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. கல்வியும் , வெளிப்படையான அறிவும் உள்ள ஒருவர் எப்படி இத்தகைய தவறு செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர்களது திருமணம் முடியும் வரை பீட்டரின் முதல் மனைவி எவ்விதம் கேள்வி எழுப்பாமல் காத்துக்கொண்டிருந்தார் என ட்வீட் செய்துள்ளார்.நான் உண்மையில் நம்பிக்கையுடன் இருந்தேன்.
வனிதா கடினமான காலங்களை கடந்துவிட்டாள், அவளுடைய அனுபவங்களைப் பற்றி குரல் கொடுத்தாள். அவள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினர்.


ஆனால், இந்த விஷயத்தை கவனிக்காமல் திருமணம் செய்தது வருத்தமாக இருக்கிறது.விவாகரத்து இல்லாத திருமணத்தை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என விளாசல் பதிவை எழுதியுள்ளார் லக்ஷ்மி ராம கிருஷ்ணன்.

"இதெல்லாம்......" - வனிதாவின் மூன்றாவது கல்யாணம் குறித்து விளாசிய லக்ஷ்மி ராம கிருஷ்ணன்..! "இதெல்லாம்......" - வனிதாவின் மூன்றாவது கல்யாணம் குறித்து விளாசிய லக்ஷ்மி ராம கிருஷ்ணன்..! Reviewed by Tamizhakam on June 29, 2020 Rating: 5
Powered by Blogger.