நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் தொலைகாட்சிக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் மைனா நந்தினியான இவர் பின் சின்னத் தம்பி, அரண்மனை கிளி, உட்பட ஏராளமான சீரியல்களில் நடித்தார்.
அத்துடன் பல திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தார். இவர் ஜிம் ட்ரெயினரான கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் ஏற்கனவே திருமணமானதை மறைந்து நந்தினியை திருமணம் செய்த கார்த்திக்கின் உண்மை முகம் தெரியவர அவரை விட்டு பிரிந்து பிறந்த வீட்டுக்கு சென்றார் நந்தினி.
இதனால் கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின் இவர் யோகேஸ்வரன் என்கிற யோகேஷை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் அண்மையில் நந்தினி கொடுத்த பேட்டி ஒன்றில் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
குழந்தை வளர தொடங்கி மூன்று மாதம் வரை வெளியே சொல்ல வேண்டாம் என டாக்டர்கள் கூறியதால் வெளியே கூறவில்லை என்றும் தற்போது 5 மாதம் ஆன நிலையில் நண்பர்களுடன் இந்த மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில், இஞ்சி இடுப்பழகி பாடலின் Dj வெர்ஷனுக்கு வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் அம்மணி. இதோ அந்த வீடியோ,



