பொசு பொசுவென குண்டாக இருந்த வித்யுலேகா ராமன் இப்போது எப்படி மாறிட்டார் பாருங்க - தூக்கிவாரி போட்டுடும்..!


நடிகை வித்யுலேகா ராமன். இவர், பிரபல குணசித்திர நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள். 2012 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்ட கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு திரைப்படங்களில் வித்யுலேகா முதன்முதலில் தோன்றினார்.

அதில் ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யனும் குமாரு, அஜித்தின் வீரம் போன்ற திரைப்படத்தில் நடித்தார்.

காமெடி வேடங்களை தவிர்த்து விட்டு, இனிமேல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கவிரும்புவதாகக் கூறியுள்ளார். பெரும்பாலும் இவர் வரும் காட்சிகளில் தனது உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடக்கூடியவர். ஆனால் என்ன ஆச்சோ, தெரியவில்லை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார் வித்யுலேகா.

உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள இவர் தன்னுடைய ட்ரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார். பொசு பொசுவென இருந்த வித்யுலேகா ராமன் இப்போது ஒல்லியாகி விட்டாரே என்று ஆச்சரியப்பட்டுபோயுள்ளனர்.