" தன் மகன் ஹீரோவாகவில்லை..! அதனால், என்னுடைய மகனும் ஹீரோவாக கூடாதுன்னு..." - வடிவேலு குறித்து சிங்கமுத்து பகீர்..!


காமெடி நடிகரும், இயக்குனருமான மனோபாலா நடத்தி வரும் யு டியூப் சேனலில் நடிகை சிங்கமுத்து வடிவேலுவை பற்றி சில விஷயங்களை பதிவு செய்திருந்தார்.

இதனால், கடுப்பான வடிவேலு, தன்னை பற்றி அவதூறாக பேசியதாக தென்னிந்திய நடிகர் சங்க சிறப்பு அதிகாரிக்கு புகார் மனு அளித்திருந்தார். இந்த விஷயத்தை வடிவேலு கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டிருந்தால் கூட யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், புகார் கொடுத்து எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதையும் தாண்டி பெட்ரோலை ஊற்றி விட்டார் வடிவேலு. இதனால், இந்த விவகாரம் தீப்பிடிக்க வடிவேலு புகார் கொடுக்கும் அளவுக்கு சிங்கமுத்து அப்படி என்னதான் பேசியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

வடிவேலு பற்றி சிங்கமுத்து அப்படி என்ன பேசினார் என்று இங்கே பார்க்கலாம். சிங்க முத்து கூறியுள்ளதாவது, என் வாழ்க்கை கதையை பங்காளி வடிவேலு இல்லாமல் எழுத முடியாது. அந்த அளவிற்கு நானும் அவரும் உயிருக்கு உயிரான நண்பர்களாக இருந்தோம். இப்போதும் நான் வடிவேலுவை வெறுக்கவில்லை.

அவருடன் நடிக்க தயாராகவே இருக்கிறேன். நான் சந்தானத்துடன் இணைந்து நடித்ததில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பமானது. சந்தானத்துடன் இணைந்து நான் நடித்தது அவருக்கு பிடிக்கவில்லை.

என்னுடைய மகனை ஹீரோவா நடிக்க வைத்தேன். வடிவேலுக்கு அவருடைய மகனை ஹீரோவாக நடிக்க வைக்கணும்னு ஆசை. ஆனா அவனுக்கு யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் மகனை ஹீரோவாக்க முடியவில்லை என்றால் அதற்கு என் மகன் ஏன் ஹீரோவாகக் கூடாது, என்னுடைய பையன் பெரிய ஹீரோவாகிடுவானோன்னு நினைச்சுட்டார். அது அவருக்கு பெரிய சங்கடமாகிவிட்டது.

நான் வடிவேலுவை குறை சொல்ல விரும்பவில்லை. இப்போ கூட அவர் அறியாமையில் செய்துவிட்டதாகத் தான் நினைக்கிறேன். வடிவேலு நல்ல நடிகர், நல்ல திறமைசாலி. ஆனால், கேட்பார் பேச்சை கேட்பார்.

அதுதான் அவரது இந்த நிலைக்கு காரணம். 8 லட்சத்துக்கு நான் வாங்கிக் கொடுத்த இடத்தை 22 கோடிக்கு விற்றுவிட்டார். அவர் தர வேண்டிய 40 லட்ச ரூபாய் கமிஷன் பணத்தை கேட்பேன் என்று நினைத்து என் மீது வழக்கு தொடர்ந்தாரா என்று எனக்கு தெரியாது.

அவருடைய பணத்தை நான் ஏமாற்றிவிட்டதாக தொடரப்பட்ட அந்த வழக்கு முடிவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். உண்மையாகவே அருமையான நடிகனை இழந்துட்டோம். என்று நடிகர் சிங்கமுத்து கூறியிருந்தார்.

" தன் மகன் ஹீரோவாகவில்லை..! அதனால், என்னுடைய மகனும் ஹீரோவாக கூடாதுன்னு..." - வடிவேலு குறித்து சிங்கமுத்து பகீர்..! " தன் மகன் ஹீரோவாகவில்லை..! அதனால், என்னுடைய மகனும் ஹீரோவாக கூடாதுன்னு..." - வடிவேலு குறித்து சிங்கமுத்து பகீர்..! Reviewed by Tamizhakam on June 03, 2020 Rating: 5
Powered by Blogger.