பொசு பொசுவென இருக்க தொகுப்பாளினி ஜாக்லின் எப்படி மாறிட்டார் பாருங்க..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


விஜய் டீவியில் டிடிக்கு இணையாக ரசிகர்களை பெற்றவர் தொகுப்பாளினி ஜாக்குலின்.இவர் விஜய் டிவியில் வி.ஜே ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்துள்ளார்.

அதன் பின்பே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணிக்கு தேர்வானார். கோலிவுட்டில் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கச்சியாக நடித்து அசத்தி இருந்தார்.

தற்போது, விஜய் தொலைகாட்சியில் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். குண்டாக பொசு பொசுவென இருந்த இவர் இந்த கொரோனா லாக்டவுனில் உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போயுள்ளார்.

இவருடைய சமீபத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி ஒல்லியாகிடீங்க..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.