ஜீவா படத்தில் நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படம்..!


நடிகை மீனாட்சி கேரளா மாநிலம் கோழிக்கோட்டை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் பிறந்த இவருடைய உண்மையான பெயர் மரியா மார்கரெட் ஷார்மிலி (Maria Margaret Sharmilee) என்பது ஆகும்.

சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்துவிட்டு அங்குள்ள ஒரு முன்னணி கல்லூரியில் டிகிரி முடித்தார். இவருக்கு பள்ளியில் படிக்கும் போதே பொசு பொசுவென அழகு கொஞ்சும் பெண்ணாக இருந்த காரணத்தினால் இவருக்கு அப்போதே, பட வாய்ப்புகள் வந்தது.

ஆனால், படிப்பில் கவனம் சிதறி விடும் என்பதால் முதலில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி பட வாய்ப்புகளை இவரது பெற்றோர்கள் மறுத்து விட்டனர்.

அதன்பின்னர் கல்லூரி முடித்த கையோடு ஜெயா டிவியில் ‘காசுமேல’ என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார். இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் மீண்டும் வந்தது. 2002ஆம் ஆண்டு நடிகர் ஜீவா ஹீரோவாக அறிமுகமான "ஆசை ஆசையாய்" என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனார்.

தமிழில், அன்பே அன்பே, திவான், பேசுவோமா ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஒரு தெலுங்கு படத்திலும் பல மலையாள படத்திலும் நடித்தார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் ஐவரும் ஒருவர். ஆனால், காலப்போக்கில் புது நடிகைகளின் வரவால் சினிமாவில் இருந்து காணமல் போனார்.


இறுதியாக, கடந்த 2005-ம் ஆண்டு காஃபுர் கா தோஸ்த் என்ற மலையாள படத்தில் நடித்தார். அதன் பிறகு என்ன ஆனார்..? எங்கே போனார்..? என்ற எந்த விபரமும் இவரை பற்றி இல்லை. இவரது சமீபத்திய புகைப்படம் மட்டும் ஒன்று இணையத்தில் வெளியாகி வைராலாகி வருகின்றது.

ஜீவா படத்தில் நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படம்..! ஜீவா படத்தில் நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 06, 2020 Rating: 5
Powered by Blogger.