திடீரென காணமல் போன "சிலந்தி" நடிகை மோனிகா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!


சினிமாவில் துருதுருவென ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் திடீரென காணமல் போய்விடுவார்கள். அப்படியான நடிகைகள் பட்டியலை எடுத்தால் அது தினந்தந்தி கன்னித்தீவு போல முடியவே முடியாது நீண்டு கொண்டே போகும்.

அப்படி, ஒரு காலகட்டத்தில் தனது சிறந்த நடிப்பின் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த சிலந்தி மோனிகா என்ற ரேகா மருதராஜ் திடீரென காணாமல் போனார்.

இவர் 1990 ஆம் ஆண்டு அவசர போலீஸ் 100 என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் முலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து அவர் தெலுங்கு,மலையாளம், கன்னடம் மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.

இவர் 2002 ஆம் ஆண்டு அழகி என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு தமிழில் அதிகப்படியான பட வாய்ப்புகள் கிடைத்தது.

காதல் அழிவதில்லை, பகவதி, இனிது இனிது காதல் இனிது, சண்டைக்கோழி , இம்சை அரசன் 23ம் புலிகேசி, கௌரவர்கள் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு காலகட்டத்தில் சிறப்பாக வந்து கொண்டிருந்தவர்.

இவர் நடிப்பில் வெளியான சிலந்தி திரைப்படம் வசூலில் சக்கை போடு பட்டது. இந்த படத்தின் நடித்த ஹீரோ மீது புகார் கூறினார் மோனிகா. படப்பிடிப்பு தளத்தில் என் இடுப்பை நிஜமாகவே அவர் தடவினார் என்று புகார் வைத்தார் மோனிகா. ஆனால், அந்த ஹீரோவோ.. ஆன் கேமராவில் நான் நடிக்கதான் செய்தேன். அவர் என் மீது வீண் பழி போடுகிறார் என்று கூறினார்.

இந்த நிலையில் திடீரென திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் இருப்பினும் திருமணத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் அதனை மறுத்துள்ளார் மோனிகா.இந்துவான இவர் திருமணம் செய்துகொள்ளப்போகும் நபர் இஸ்லாமியர் எனபதால் இஸ்லாம் மதத்தை கடைப்பிடித்து பின் தன்னை முழுவதுமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார்.


பிறகு தனது பெயரை ரஹீமா என்று மாற்றிக்கொண்டார் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்பொழுது என்ன பண்ணுகிறார்..? எங்கு இருக்கிறார்..? என்று எந்த தகவலும் இல்லை.

திடீரென காணமல் போன "சிலந்தி" நடிகை மோனிகா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! திடீரென காணமல் போன "சிலந்தி" நடிகை மோனிகா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! Reviewed by Tamizhakam on June 19, 2020 Rating: 5
Powered by Blogger.