இதையெல்லாம் விட "சங்கி" என்பது சிறந்தது தான்..! - சாட்டை சுழற்றும் விஜய் பட இயக்குனர் பேரரசு..!


பிரபல இயக்குனர் பேரரசு தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து சமீப காலமாக பதிவுகளை பதிவு செய்து வருகிறார். நாட்டரசன்கோட்டையில் பிறந்த இவர் பெரும்பாலும் ஊர் பெயர்களை கொண்டே தன் திரைப்படங்களின் பெயரையே பயன்படுத்துவார்.

சிறுவயதில் என் பொற்றோரிடம் ஊருக்கு கூட்டிட்டு போங்க.. ஊருக்கு கூட்டிட்டு போங்க என்று கேட்பேன். ஆனால், அப்போது போதிய வசதி இல்லை என்ற காரணத்தினால் என்னை எங்கும் அழைத்து செல்லவில்லை. அதனால், நான் எடுக்கும் படங்களுக்கு ஊர்களின் பெயரை வைத்து எடுக்கிறேன் என்று கூறுகிறார்.

இவர் சண்டை, நகைச்சுவை, குடும்பம், காதல் போன்ற அனைத்தையும் ஒன்றாக இணைத்து மசாலா திரைப்படம் இயக்குவதில் பிரபலபனவர். பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார்.நடிகர் விஜய்யுடன் திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

சமீப காலமாக அரசியல் கருத்துக்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "ஊழல்வாதி, லஞ்சப்பேர்வழி தமிழின துரோகி! கட்டப் பஞ்சாயத்து! பொய்யன்,புளுகன், ஓசிச்சோறு, கொள்ள கோஷ்டி துரோகக் கும்பல், மாஃபியா, வேடதாரி இந்த வார்த்தைகளை விட 'சங்கி' என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்!" என்று ஒரு பதிவை எழுதியுள்ளார்.


இந்து மதத்திற்கு எதிராக பேசுபவர்களை எதிர்த்தால் சங்கி, பாஜக கைக்கூலி என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இப்படியான பதிவை பதிவு செய்துள்ளார் இயக்குனர் பேரரசு.

இதையெல்லாம் விட "சங்கி" என்பது சிறந்தது தான்..! - சாட்டை சுழற்றும் விஜய் பட இயக்குனர் பேரரசு..! இதையெல்லாம் விட "சங்கி" என்பது சிறந்தது தான்..! - சாட்டை சுழற்றும் விஜய் பட இயக்குனர் பேரரசு..! Reviewed by Tamizhakam on July 22, 2020 Rating: 5
Powered by Blogger.