Posts

Showing posts with the label Director Perarasu

இதையெல்லாம் விட "சங்கி" என்பது சிறந்தது தான்..! - சாட்டை சுழற்றும் விஜய் பட இயக்குனர் பேரரசு..!

Image
பிரபல இயக்குனர் பேரரசு தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து சமீப காலமாக பதிவுகளை பதிவு செய்து வருகிறார். நாட்டரசன்கோட்டையில் பிறந்த இவர் பெரும்பாலும் ஊர் பெயர்களை கொண்டே தன் திரைப்படங்களின் பெயரையே பயன்படுத்துவார். சிறுவயதில் என் பொற்றோரிடம் ஊருக்கு கூட்டிட்டு போங்க.. ஊருக்கு கூட்டிட்டு போங்க என்று கேட்பேன். ஆனால், அப்போது போதிய வசதி இல்லை என்ற காரணத்தினால் என்னை எங்கும் அழைத்து செல்லவில்லை. அதனால், நான் எடுக்கும் படங்களுக்கு ஊர்களின் பெயரை வைத்து எடுக்கிறேன் என்று கூறுகிறார். இவர் சண்டை, நகைச்சுவை, குடும்பம், காதல் போன்ற அனைத்தையும் ஒன்றாக இணைத்து மசாலா திரைப்படம் இயக்குவதில் பிரபலபனவர். பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார்.நடிகர் விஜய்யுடன் திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். சமீப காலமாக அரசியல் கருத்துக்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் " ஊழல்வாதி, லஞ்சப்பேர்வழி தமிழின துரோகி! கட்டப் பஞ்சாயத்து! பொய்யன்,புளுகன், ஓசிச்சோறு, கொள்ள கோஷ்டி துரோகக் கும்பல், மாஃபியா, வேடதாரி இந்த வார்த்தைகளை விட 'சங்கி' என்ற வார்த்தை சிறந்...

அரசியல் கட்சியில் இணைந்தார் இயக்குனர் பேரரசு - இது தான் காரணமாம்..!

Image
நடிகர் விஜய், அஜித், விஜயகாந்த் என பல முன்னணி தமிழ் ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் இயக்குனர் பேரரசு. அடுத்ததாக நடிகர் விஜய்க்கு கதை கூறியிருக்கிறார் என்றும் விரைவில் இவர் மீண்டும் கூட்டணி அமைப்பார்கள் என்று கூட செய்திகள் வந்தது.  ஆனால், அவருக்கு விஜய்யை மீண்டும் இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா..? என்பது கேள்விக்குறியாக உள்ளது. சமீப காலமாக, சமூகநீதி, பகுத்தறிவு என்று இந்து மதத்திற்கு எதிரான பலதரப்பட்ட அரசியல் தலைவர்களும் தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள். இது இந்து மக்களின் மனதை பெருமளவில் பாதித்துள்ளது. எந்த மதத்தையும் அதனுடைய சடங்குகளையும் இழிவாக பேசுவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்து வருகிறது. குறிப்பாக, மோடி எதிர்ப்பு என்ற போர்வையில் இந்து மதத்திற்கும், இந்தியாவிற்கும் எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன சில அரசியல் கட்சிகள். இந்நிலையில். ஈ.வெ.ராமாமி குறித்த ரஜினிகாந்த்தின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்திருந்த இயக்குனர் பேரரசு தற்போது பேரரசு அரசியலில் குதித்துள்ளார்.  ஆம், தமிழக பா.ஜ.க.வில் அவர் தன்னை இணைந்து கொண்டுள்ளார். அந்த கட்...

தளபதி 65 இயக்குனர் - 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு மாஸ் ரூரல்..! - ரசிகர்கள் உற்சாகம்

Image
நடிகர் விஜய் நடிப்பில் வெறித்தனமாக உருவாகியுள்ளது பிகில் திரைப்படம். இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதனை தொடர்ந்து, தளபதி 64 படத்தில் மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்க்கவுள்ளார் விஜய். இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை உருசாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தளபதி 65 படத்தில் நடிகர் விஜய் தன் திரைவாழ்வில் திருப்பாச்சி, சிவகாசி என குறிப்பிடத்தக்க படங்களை கொடுத்த இயக்குனர் பேரரசு-வுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டு படங்களும் ரூரல் சப்ஜெக்ட் படங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தங்கை செண்டிமெண்ட்டில் திருப்பாச்சி படமும், அம்மா சென்டிமெண்டில் சிவகாசி படமும் உருவான நிலையில் விஜய், பேரரசு இணையும் அடுத்த படம் அரசியல் சாயத்தில் உருவாகவுள்ளது என்றும் கூறப்படுகின்றது.