"சாரே... கொல மாஸ்சு" - சிறுத்தை சிவா அடுத்தடுத்து இயக்கவுள்ள மூன்று முன்னணி நடிகர்கள்..!


நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தோட டைரக்டர் யாருப்பா..? என தேடினார்கள். இந்த படத்தின் மூலம் தன்னை ஒரு இயக்குனராக முத்திரை பதித்தார் இயக்குனர் சிவா.

இதன்பின், தல அஜித்துடன் தொடர்ந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசன் என நான்கு படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வளம் வந்துகொண்டு இருக்கிறார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து "அண்ணாத்த" எனும் படத்தை இயக்கி வருகிறார்.

சூப்பர் ஸ்டார் படத்தின் இயக்குனர் என்றால் சும்மாவா..? பல முன்னணி நடிகர்கள் சிறுத்தை சிவாவிடம் கதை கேட்டுள்ளார்கள். இந்நிலையில் இவர் "அண்ணாத்த" படத்திற்கு பிறகு மூன்று முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் எடுக்க போகிறார் சிறுத்தை சிவா.

ஏற்கனவே, சிறுத்தை சிவாவிடம் தளபதி விஜய் கதை கேட்டு சொல்லி ஒகே செய்துள்ளாராம். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க போகிறார்களாம். குடும்பப்பாங்கான மற்றும் ஜனரஞ்சகமான படமாக இது இருக்கும் என கூறுகிறார்கள். பொதுவாக, குடும்ப செண்டிமெண்ட் படங்களில் விஜய் நடித்தால் சொல்லவே வேண்டாம் படம் ஹிட் அடித்து விடும். காரணம், விஜய்க்கு குடும்பபெண்கள் முதல் குட்டி குழந்தைகள் வரை ரசிகர்கள்.

மேலும் கடந்த பல வருடங்களாக ஒரு ஹிட் படம் கூட கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோரும் சிறுத்தை சிவாவிடம் சில கதைகள் கேட்டு வைத்துள்ளார்களாம். நடிகர் சூர்யாவுக்கு "அயன்" படத்திற்கு பிறகு எந்த படமும் பேர் எடுத்துகொடுக்கும் படி அமையவில்லை. அதே போல, விக்ரம் கடைசியாக தெய்வதிருமகள் படத்தில் பேர் எடுத்தார். அதன் பிறகு, ஷங்கர் இயக்கத்தில் வெளியான "ஐ" திரைப்படம் விமர்சன ரீதியில் செமத்தியாக அடி வாங்கியது.

தலைவருடன் "அண்ணாத்த" படம் முடிந்த பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு படு பிஸியாக இருக்க போகிறார் சிவா என்பது மட்டும் தெரிகின்றது. இந்த மூன்று படங்களை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை காத்திருந்து பார்ப்போம்.