TRP-க்காக இதை செய்வதை கைவிட வேண்டும் - பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை ஓவியா திடீர் கருத்து..!


கேரளத்து பெண் குட்டியான ஓவியா ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவரால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் மனதையும் கொள்ளையடித்து சென்றார்.

அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற ஆராவுடன் காதல் வயப்பட்டு மன அழுத்தம் ஏற்பட்டதால் நிழ்சியை வெளியேறிய ஓவியா மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் .

அதன் பயனாக தற்போது தொடர்ச்சியாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் கலைநிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்று வந்தார்.நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் திரைப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் தற்போது ராஜபீமா என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஓவியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அவ்வபோது எதாவது சர்ச்சையான விஷயங்களையும் பேசி வருகிறார் ஓவியா. அந்த வகையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா..? எதிர்கிறீர்களா..? என்று கேட்டுள்ளார்.

சிலர் நிச்சயம் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ஓவியா, TRP-க்காக போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர்களை துன்புறுத்த கூடாது என்று விரும்புகிறேன் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரும் தற்கொலை முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.