கொல்கத்தா நகரின் ஒரு அமைதியான குடியிருப்புப் பகுதியில், குடும்ப உறவுகளின் நிழலில் மறைந்திருந்த ஒரு கொடூரமான ரகசியம் வெளியுலகுக்கு வந்துள்ளது. இது ஒரு சகோதரியின் துரோகம், ஒரு கணவனின் தவறு, ஒரு மனைவியின் உடைந்த இதயம் ஆகியவற்றின் கதை.
இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் வலி கருதி, பெயர்கள் மற்றும் சம்பவம் நடந்த இடம் மாற்றப்பட்டுள்ளது.

உங்களை சுற்றி இது போன்ற சூழல்கள் மற்றும் பிரச்சனைகள் நடந்து விடாமல் அவதானமாக இருக்க வேண்டும் என்பதற்கு தான் இந்த பதிவு.
ராதா (பெயர் மாற்றப்பட்டது) என்ற இளம் பெண், தனது கணவர் அருணுடன் (பெயர் மாற்றப்பட்டது) கொல்கத்தாவில் இனிய வாழ்க்கை நடத்தி வந்தார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக இருந்தது.
ராதாவின் தங்கை மீரா (பெயர் மாற்றப்பட்டது), நர்சிங் கல்லூரியில் படிப்பதற்காக அக்காவின் வீட்டுக்கு அருகிலுள்ள கல்லூரியில் சேர்ந்திருந்தாள். அக்காவின் வீடு கல்லூரிக்கு மிக அருகில் இருந்ததால், மீரா அங்கேயே தங்கி படித்து வந்தாள். வார இறுதி நாட்களில் மட்டுமே தனது சொந்த வீட்டுக்கு செல்வது அவளது வழக்கம்.
ஆனால், கடந்த ஒரு ஆண்டாக, இந்த வீட்டில் ஒரு தீய உறவு மலர்ந்திருந்தது. அக்காவின் கணவன் அருணும், தங்கை மீராவும் தகாத தொடர்பில் ஈடுபட்டிருந்தனர்.
குற்ற உணர்வு இல்லாமல், இருவரும் உல்லாசமாக பழகி வந்தனர். கல்லூரிக்கு செல்வதாகக் கூறி வெளியே சென்ற மீரா, பலமுறை அருணுடன் ஹோட்டல்களுக்குச் சென்று, சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உறவைத் தொடர்ந்து வந்திருக்கிறாள். இது அவர்களின் ரகசியமாகவே இருந்தது.
நேற்று பிப்ரவரி 14, காதலர் தினம். ராதா, தனது கணவன் தனக்கு ஏதாவது அன்பளிப்பு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள். ஆனால், அன்று அவளுக்கு காத்திருந்தது கொடூரமான அதிர்ச்சி.
வழக்கமாக காலில் கொலுசு அணிந்திருந்த ராதா, அன்று வெள்ளி கொலுசை சுத்தம் செய்யும் சோப்பில் ஊற வைத்திருந்தாள். எனவே, அவள் நடக்கும்போது சத்தம் வரவில்லை. அமைதியாக படுக்கை அறைக்குள் நுழைந்த அவள் கண்ட காட்சி அவளை உலுக்கியது.
தனது கணவன் அருண், கட்டிலுக்கு கீழே அமர்ந்து கொண்டு வீடியோ காலில் ஆடையின்றி இருந்த மீராவுடன் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தான். அக்காவின் கணவனும் தங்கையும் இப்படி உறவில் இருப்பதை கண்ட ராதா அதிர்ந்து போனாள். அலறியபடி பின்னால் திரும்பிய மீரா, தொலைபேசியை துண்டித்தாள். அருணும் மனைவியைப் பார்த்து அதிர்ந்து போனான்.
வாக்குவாதம் தொடங்கியது. அது கைகலப்பாக மாறியது. உடைந்த இதயத்துடன் ராதா தற்கொலைக்கு முயன்றாள். வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி அழிக்கும் விஷத்தை சாப்பிட்டாள். மயங்கினாள், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் இருந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் விரைந்து வந்து அருணை கைது செய்தனர். மீராவும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். இருவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராதா தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து நீங்கியுள்ளது என்றாலும், மனரீதியான அதிர்ச்சி ஆழமாக இருக்கிறது.
இந்த சம்பவம் கொல்கத்தா சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளில் நம்பிக்கை எவ்வளவு எளிதில் உடையும் என்பதை இது காட்டுகிறது. தங்கைக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.
ஆனால், இந்தச் சம்பவம் அருண்-ராதாவின் குடும்பத்தை முற்றிலும் சிதைத்துவிட்டது. அருண் பெற்றோரும், ராதாவின் பெற்றோரும் கையறு நிலையில் முகம் பார்த்துக்கொள்ள முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குடும்பத்தில் நம்பிக்கை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.
பஞ்சும், நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்கததானே செய்யும் என்பார் சிலர்.. தனி மனித ஒழுக்கம் முக்கியம் என்பார் சிலர்.. ஆனால், நம்முடைய வாழ்க்கை பாதுகாப்புக்கு என்ன முக்கியமோ.. அதை செய்ய தவறக்கூடாது.
தன்னுடைய உடன் பிறந்த தங்கையே என்றாலும், ஹாஸ்டலில் தங்கி படித்துக்கொள் என்று மீராவிடம் ராதா கண்டிப்பு காட்டியிருந்தால் இவ்வளவு பெரிய கொடூரம் தவிர்க்கப்பட்டிருக்கும். தாய், பிள்ளை என்றாலும் வாயும், வயிறும் வேறு வேறு என்று சும்மாவா சொன்னாங்க..?
Summary in English : In Kolkata, a woman discovered her husband in an inappropriate video call with her younger sister, who was staying at their home while studying nearby. This led to a family conflict, the wife's distress and hospitalization, and police involvement with both the husband and sister facing legal proceedings.

