சத்தீஸ்கரின் ஒரு சிறிய நகரத்தில், காதல், துரோகம், கொலை மற்றும் பிளாக்மெயில் ஆகியவை ஒரு கொடூரமான சங்கிலியாக இணைந்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்து சிதறியுள்ளது.
இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தில் மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரேகா, ஆறு ஆண்டுகளாக விக்ரமை தீவிரமாக காதலித்து வந்தாள். ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்தலால், அர்ஜுன் என்ற இன்னொரு இளைஞனை திருமணம் செய்து கொண்டாள்.
திருமணத்துக்குப் பிறகும் ரேகாவால் விக்ரமை மறக்க முடியவில்லை. அவளது மனம் எப்போதும் அவனிடமே இருந்தது. கணவர் அர்ஜுனுடன் அடிக்கடி சண்டை, கோபம், வாக்குவாதங்கள் – இவை வீட்டை நரகமாக்கின.
ஒரு நாள், ரேகா வீட்டை விட்டு வெளியேறி விக்ரமுடன் சென்று விட்டாள். பெற்றோர்கள் மிரட்டி, புத்திமதி சொல்லி, அவளை மீண்டும் அர்ஜுனின் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டனர்.
ஆனால், ரேகாவின் மனதில் கொலை எண்ணம் துளிர்த்தது. "அர்ஜுன் இல்லாவிட்டால், விக்ரமுடன் சுதந்திரமாக வாழலாம்" என்று முடிவு செய்தாள்.
திட்டம் கொடூரமானது. ஒரு இரவு, அர்ஜுனுக்கு அதிகமான மது கொடுத்து மயக்கினாள். நள்ளிரவில் விக்ரமும் அவனது நண்பன் ராகேஷும் திருட்டுத்தனமாக வீட்டுக்குள் நுழைந்தனர்.
அர்ஜுன் முகத்தில் தலையணை வைத்து அமுக்கி கொலை செய்து விட்டு தப்பினர். இரண்டு ஃபுல் பாட்டில் மதுவை குடித்து மயங்கி கிடந்த அர்ஜுன் தான் கொலை செய்யப்படுவது கூட தெரியாமல் இறந்து போனான்.
காலையில் "மதுபோதையில் இறந்துவிட்டார்" நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அதிகமாக குடித்தார் என்று ரேகா அழுது நடித்தாள். அனைவரும் நம்பினர். மது பாட்டில்கள் அறையில் கிடந்ததால் சந்தேகம் எதுவும் எழவில்லை. இறுதிச் சடங்குகள் முடிந்தன.
சில மாதங்களில் ரேகா விக்ரமுடன் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினாள். ஆனால் இங்கேதான் மிகப்பெரிய திருப்பம் காத்திருந்தது.
ராகேஷ் – அந்த கொலையில் உதவிய நண்பன் – ரேகாவின் மீது தவறான ஆசை வளர்த்துக் கொண்டான். ரேகாவின் அழகு மீது எப்போதுமே அவனுக்கு ஒரு கண் இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால், இந்த கொலையில் பங்கெடுத்ததே ரேகாவின் அழகை அனுபவிக்கத்தான். சினிமா நடிகை போல வாட்ட சாட்டமான தோற்றத்தில் இருக்கும் ரேகா மீது ராகேஷுக்கு தவறான ஆசை புறையோடி கிடந்தது.
ஒரு நாள் விக்ரம் வீட்டில் இல்லாத நேரம், அவளிடம் வந்து, "நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க நான் கொலை செய்தேன். எனக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்டான்." ரேகா அதிர்ந்து போனாள்.
அண்ணா, பணம் கொடுக்கிறோம் அண்ணா.. இதை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று கெஞ்சினால். எனக்கு, பணமெல்லாம் வேண்டாம், " நீ.. என்னுடன் உல்லாசமாக இரு. உன் கணவனுக்கு (விக்ரம்) தெரியாமல் பார்த்துக் கொள். இல்லையென்றால், கொலை விவரத்தை போலீசிடம் சொல்லி விடுவேன். ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.. உன்னை அடிக்கடி தொந்தரவு செய்ய மாட்டேன்.. மாதம் ஒருமுறை நீ விரும்பும் நேரத்தில்.." என்று மிரட்டினான்.
ரேகா பயந்து போனாள். நான்கு ஆண்டுகள் ராகேஷுடன் ரகசிய உறவில் இருந்தாள். விக்ரமுக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஒரு கட்டத்தில் ரகசியம் வெளியேறியது. விக்ரமுக்கு விஷயம் தெரிந்து பிரச்சினை வெடித்தது.
ராகேஷை கடுமையாக தாக்கினான் விக்ரம். கோபத்தில் ராகேஷ் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொலைபேசி செய்து, "ரேகாவும் விக்ரமும் சேர்ந்து அர்ஜுனை கொலை செய்தார்கள்" என்று தகவல் கொடுத்தான்.
நான்கு ஆண்டுகளாக மறைந்திருந்த ரகசியம் வெளிச்சத்துக்கு வந்தது. போலீஸார் விசாரணை நடத்தி, ரேகா, விக்ரம், ராகேஷ் மூவரையும் கைது செய்தனர். கொலை, பிளாக்மெயில், தவறான உறவு என பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தொடங்கிய இடத்தில் கொலை முடிந்தது; நம்பிக்கை துரோகத்தில் மாறியது; இறுதியில் மூவரும் சிறைக்குள் அடைபட்டுள்ளனர். உண்மையான காதல் என்றால் இது அல்ல – இது ஒரு கொடூரமான பழிவாங்கல் சங்கிலி!
Summary : In Chhattisgarh, a woman married under family pressure while in a long relationship. Unable to forget her former partner, she later lived with him after her first husband's natural death was reported. Years later, a friend involved in past events demanded a relationship and threatened disclosure, leading to police involvement and arrests of all three.

