"முன்னாடி ஹாட்.. ஆனா, இப்போ..." - VJ ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் - நெட்டிசன்கள் அட்வைஸ்..!


சின்னத்திரை தொகுப்பாளர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலரே இளைஞர்கள் மனதில் சட்டென்று இடம்பிடிப்பார்கள். அப்படி ஒருவர் தான் ரம்யா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட நிகழ்ச்சிகள் எனப் பல மேடைகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார்.

13 ஆண்டுகள் முறைப்படி பரதம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். இவருக்கு ‘ஃபிட்னஸ் ஃப்ரீக்’ என்ற இன்னொரு முகமும் இருக்கிறது. சினிமா நடிகை என கலக்கி வருகிறார் ரம்யா.

ஆடை படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்குதல், தொலைகாட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமா,சீரியல் என பிஸியாக இருக்கும் இவர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நெருக்கமாகவே இருக்கிறார்.


அடிக்கடி தனது ஃபிட்னெஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் இப்போது முன்பு, தற்போது என தனது உடல் எடை குறைப்பை ஒப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பொசு பொசுவென இருக்கும் போது ஹாட்டாக இருந்தீர்கள். ஆனால், இப்போது 10 நாள் சாப்பிடாதவர் மாதிரி ஆகிவிட்டீர்கள் என்று கூறி வருகிறார்கள்.


"முன்னாடி ஹாட்.. ஆனா, இப்போ..." - VJ ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் - நெட்டிசன்கள் அட்வைஸ்..! "முன்னாடி ஹாட்.. ஆனா, இப்போ..." - VJ ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் - நெட்டிசன்கள் அட்வைஸ்..! Reviewed by Tamizhakam on July 19, 2020 Rating: 5
Powered by Blogger.