கைதி படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி சேர்ந்து நடித்துள்ள படம் "மாஸ்டர்". ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படம் கொரோனா பிரச்சினையால் ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.
ஏப்ரல் மாதமே ரிலீசாக வேண்டிய மாஸ்டர், கொரோனா ஊரடங்கால் எப்போது ரிலீசாகும் என்றே தெரியவில்லை. ரிலீசுக்கு தயாராக இருந்த மற்ற படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீசாகி வரும் சூழலில், மாஸ்டரும் அதே போன்று ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து தான் படத்தைக் கொண்டாட வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது. இதனால் படம் இந்தாண்டு ரிலீசாகுமா அல்லது அடுத்தாண்டா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அமேசான் பிரைமில் இம்மாதம் 14ம் தேதி மாஸ்டர் ஒளிபரப்பாக இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்கீர்ன்ஷாட்டாக பரவி வரும் அந்த போட்டோவைப் பார்த்து விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிஜமாகவே ஓடிடியில் மாஸ்டர் ரிலீசாக இருக்கிறதோ என்ற சந்தேகம் அவர்களுக்கு. ஆம், மாஸ்டர் OTT-யில் வெளியாவது உண்மை தான். ஆனால், சம்பந்தப்பட்ட அந்த போஸ்டர் இடம் பெற்றிருந்த "மாஸ்டர்" திரைப்படம் ஒரு கொரியன் படத்தினுடையது. அதன்படி ஆகஸ்ட் 14-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிற மாஸ்டர் படம் விஜய் நடித்தது இல்லை. அது ஒரு கொரியப் படம் ஆகும்.
Tags
Master Movie